நீங்கள் வேலை தேடுபவரா? ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது.!

Posted By:

சென்னை : இந்திய பொதுத்துறை விமான நிறுவனம் ஏர் இந்தியா இதன் கீழ் செயல்படும் துணை நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் 32 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் வேலை தேடுபவரா? ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது.!

மொத்தம் 32 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கோ ஆர்டினேட்டர் வேலைக்கு - காலிப்பணியிடங்கள் 10

பிரைசங் அனலிஸ்ட் வேலைக்கு - காலிப்பணியிடங்கள் 3

ரூட்மேனேஜர் வேலைக்கு - காலிப்பணியிடங்கள் 7

ஆபிசர் சேல்ஸ் வேலைக்கு - காலிப்பணியிடங்கள் 9

மேனேஜர் (பிளைட் சேப்டி) வேலைக்கு - காலிப்பணியிடங்கள் 1

ஆபீசர் (பிளைட் சேப்டி) வேலைக்கு - காலிப்பணியிடங்கள் 2

வயது வரம்புத் தகுதி

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 40 வயதுக்கு உட்பட்டிருந்தால் அவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.

கல்வித் தகுதி

பட்டப்படிப்பு, எம்.பி.ஏ, பி.இ. பி.டெக் படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. சில பணிகளுக்கு அனுபவம் கோரப்பட்டு உள்ளது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித் தகுதி, வயது வரம்வு விவரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இது பற்றிய அறிவிப்பு மே 27 ஜூன் 2 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது.

மேலும் விரிவான விவரங்களை www.airindiaexpress.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.

English summary
Air India Charters Limited invites applications from Indian Citizens (wherever domiciled)for recruitment of following posts in Operations, Commercial& etc

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia