எம்பிஏ படிப்பில் சேர உதவும் ஏஐஎம்டி எம்ஏடி தேர்வு: ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்யலாம்...!!

Posted By:

டெல்லி: எம்பிஏ படிப்பில் சேர உதவும் ஏஐஎம்டி எம்ஏடி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தயார் நிலையில் உள்ளன. இந்தப் படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று இணையதளத்திலிருந்து ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த ஹால் டிக்கெட்டுகள் அநேகமாக இன்று மாலைக்குள் வெளியாகும் என்று தெரிகிறது.

எம்பிஏ படிப்பில் சேர உதவும் ஏஐஎம்டி எம்ஏடி தேர்வு: ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்யலாம்...!!

இந்த எம்ஏடி தேர்வை ஆண்டுதோறும் 4 முறை நடத்துகிறது. பிப்ரவரி, மே, செப்டம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் நாட்டின் முக்கிய நகரங்களில் இந்தத் தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் எம்பிஏ படிப்புகளில் எளிதில் சேர முடியும்.

ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்வது எப்படி? இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளைப் பெற https://www.aima.in/testing-services/mat/mat.html என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளவேண்டும். பின்னர் 'AIMA MAT May 2016 Admit Card' என்ற இடத்தில் கிளிக் செய்து தேவையான விவரங்களைக் கொடுத்து ஹால் டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்தத் தேர்வு மே 1, மே 7-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

English summary
The admit cards for the AIMA MAT May 2016 is likely to be released today on April 23, 2016. Candidates can download the admit cards from the official website of AIMA. AIMA conducts MAT examination 4 times a year, which is generally scheduled in the month of February, May, September and December. MAT is conducted in all major cities across the country and also in leading cities abroad. All India Management Aptitude Testing Service (AIMATS) conducts Management Aptitude Test (MAT) for admissions into MBA and equivalent programmes.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia