நீங்கள் டாக்டரா....!! அப்படின்னா உங்களுக்கு எய்ம்ஸ்-ல் வேலை...!!

Posted By:

டெல்லி: ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ் (ஏஐஐஎம்எஸ்) மருத்துவமனையில் டாக்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே 6-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

நீங்கள் டாக்டரா....!! அப்படின்னா உங்களுக்கு எய்ம்ஸ்-ல் வேலை...!!

மொத்தம் 70 ஜூனியர் ரெசிடண்ட் பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன. டாக்டர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷிலுள்ள ஏஐஐஎம்எஸ் மருத்துவமனையில் பணியமர்த்தப்படுவர்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) அங்கீகாரம் அளித்த இன்ஸ்டிடியூட்டிலிருந்து எம்பிபிஎஸ் பட்டம் அல்லது அதற்கான மருத்துவப் பட்டப் படிப்பை படித்து முடித்திருக்கவேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் டாக்டர் பணியிடங்களுக்கு நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

சம்பளம் ரூ.15600 to ரூ. 39100 பிளஸ் ரூ.5,400 என்ற அடிப்படையில் இருக்கும். வயது 40க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

தகுந்த ஆவணங்களை இணைத்து விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும்.

விண்ணப்பங்கள் மே 6-ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு http://www.aiimsrishikesh.edu.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Applications are invited by All India Institute of Medical Sciences (AIIMS), Rishikesh for 7 Junior Resident posts. To know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates scroll down.Name of the Post: Junior Resident. Number of Posts: 70 Posts. Who is Eligible for the AIIMS Rishikesh Job?Qualification: Candidates should have completed MBBS/equivalent Degree recognised by MCI.MCI registration is mandatory, if candidates are selected in this job. Pay Scale: Rs.15600 to 39100 with a Grade Pay of Rs. 5400/- + NPA Age Limit: 40 years. Application Fee: General: Rs.500/- ST/SC: Rs.100/- Location of the Job: Rishikesh (Uttarakhand)

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia