எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 353 காலிப் பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா?

Posted By:

சென்னை : அகில இந்திய மருத்துவ மையம் சுருக்கமாக எய்ம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. தற்போது எய்ம்ஸ் மையத்தின் பல்வேறு கிளைகளில் ஜூனியர் ரெசிடென்ட், சீனியர் ரெசிடென்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் கிளையில் 242 சீனியர் ரெசிடென்ட் பணியிடங்களையும், ஜோத்பூர் எய்ம்ஸ் கிளையில் 111 சீனியர் ரெசிடென்ட் பணியிடங்களையும் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள்

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 353 காலிப் பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா?

பாட்னா 242 பணியிடங்கள்

பாட்னா எய்ம்ஸ் கிளையில் நிரப்பப்படும் சீனியர் ரெசிடென்ட் பணியிடங்களில் அனட்டாமி, ஜெனரல் மெடிசின், ஜெனரல் சர்ஜரி அனஸ்திசியாலஜி, கார்டியாலஜி, நியூராலஜி உள்ளிட்ட 38 பிரிவுகளில் பணிகள் உள்ளன.

வயது வரம்பு

இந்த பணிகளுக்கு 31.07.2017ந் தேதியில் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி, பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித் தகுதி, விண்ணப்பக்கட்டணம்

முதுநிலை மருத்துவ படிப்புகள், பிஎச்.டி ஆய்வு பட்டங்கள் பெற்றவர்களுக்கு பணிகள் உள்ளன. நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ. 1000ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி.எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பம் உள்வர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பப்படிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் சுய சான்றொப்பம் செய்த சான்றிதழ் நகல்களையும் இணைக்க வேண்டும். அஞ்சல் முகப்பில் விண்ணப்பிக்கும் பணியின் பெயர், படித்த பிரிவின் பெயர் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும். விண்ணப்பம் 27.06.2017ந் தேதிக்குள் பாட்னா எய்ம்ஸ் கிளையை சென்றடைய வேண்டும். இதுபற்றிய விவரங்களை www.aiimspatna.edu.in என்ற இணையதள பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஜோத்பூர் பணியிடங்கள்

ஜோத்பூரில் நிரப்பப்படும் 111 சீனியர் ரெசிடென்ட் பணியிடங்களில் அனஸ்திசியாலஜி, அனட்டாமி, பயோகெமிஸ்ட்ரி, கம்யூனிட்டி மெடிசின், ஜெனரல் சர்ஜரி, மைக்ரோபயாலஜி, பாரன்சிக் மெடிசின், நியோனாடாலஜி, கைனகாலஜி, டென்டிஸ்ட்ரி, நியூராலஜி, ரேடியோதெரபி உள்ளிட்ட 37 மருத்துவ பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி

எம்.எஸ். எம்.டி. டி.என்.பி. எம்.எஸ்.சி. ஹியூமன் அனட்டாமி மற்றும் பணியிடங்கள் உள்ள மருத்துவபிரிவில் முதுநிலை படிப்புடன், பிஎச்.டி நிறைவு செய்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்

பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ. 1000ம் மற்றவர்கள் ரூ. 800ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.06.2017.

English summary
Above mentioned article about all india institute of medical sciences aiims recruitment 2017.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia