எய்ம்ஸ் வேலை காத்திருக்கு.. அசத்தலான வாய்ப்பு.. விண்ணப்பிக்க ரெடியா?

Posted By:

சென்னை : அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் (எய்ம்ஸ்) மத்திய குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இதன் கிளைகள் பல்வேறு இடங்களில் இயங்குகிறது. தற்போது புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் கிளையில் போராசிரியர், உதவி போராசிரியர் உள்ளிட்ட கற்பித்தல் மற்றும் கற்பித்தல் சாராத பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எய்ம்ஸ் வேலை காத்திருக்கு.. அசத்தலான வாய்ப்பு.. விண்ணப்பிக்க  ரெடியா?

பணி விபரங்கள் -

கற்பித்தல் சார்ந்த பணிகளுக்கு - 178 காலிப்பணியிடங்கள்

போராசிரியர் பணிக்கு - 41 காலிப்பணியிடங்கள், கூடுதல் பேராசிரியர் பணிக்கு - 33 காலிப்பணியிடங்கள் , இணைப் பேராசிரியர் பணிக்கு - 46 காலிப்பணியிடங்கள் , உதவிப் பேராசிரியர் பணிக்கு - 58 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கற்பித்தல் சாராத பணிக்கு - 72 காலியிடங்கள்

கற்பித்தல் சாராத பணிகளான சாரதா ஜூனியர் பணிகளுக்கு 72 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான இட ஒதுக்கீடு விபரம் - பொது பிரிவினருக்கு - 38 இடங்கள், ஓபிசி பிரிவினருக்கு - 18 இடங்கள், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு - 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி -

கற்பித்தல் பணிக்கு எம்.டி, எம்.எஸ், டி.எம், மற்றும் டாக்டேரேட் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கற்பித்தல் சாராத பணிக்கு எம்.பி.பிஎஸ் மற்றும் பி.டி.எஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு -

இணை போராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணிக்கு 50 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். போராசிரியர் மற்றும் கூடுதல் போராசிரியர் பணிக்கு 58 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பக்கட்டணம் - பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000/- விண்ணப்பக்கட்டணமான வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் ஏதும் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை -

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 3 ஏப்ரல் 2017ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை -

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

4 ஏப்ரல் 2017 அன்று காலையில் எழுத்துத் தேர்வும், அதனைத் தொடர்ந்து நேர்க்காணலும் நடைபெறும். காலை 8 மணி முதலே சான்றிதழ் சரிப்பார்த்தல் பணி தொடங்கிவிடும் என்பதால் ஆயத்தமாகச் செல்ல வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு www.aiimsbhubaneswar.edu.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
All India Institute of Medical Sciences Center has announced 250 vacancies. Teaching and Non Teaching Vacancies are there. suitable candidates are apply now.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia