எய்ம்ஸ் மருத்துவ மைய கிளைகளில் 422 காலியிடங்கள் காத்திருக்கின்றன..!

Posted By:

புவனேஸ்வர் : அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ள இதன் மையங்களில் சீனியர் ரெசிடென்ட் மற்றும் ஜூனியர் ரெசிடென்ட் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் கிளையில் 217 இடங்களும், ராய்ப்பூரில் உள்ள கிளைகளில் 205 இடங்களும் உள்ளன. மொத்தம் 422 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

புவனேஸ்வரில் உள்ள 217 பணியிடங்களுக்கான கல்வித்தகுதி

எய்ம்ஸ் மருத்துவ மைய கிளைகளில் 422 காலியிடங்கள் காத்திருக்கின்றன..!

எம்டி, எம்எஸ், எம்டிஎஸ், டிஎன்பி, டிஎம், எம்சிஎச் போன்ற மருத்துவ படிப்புகளை படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அனஸ்தீசியாலஜி, டென்டிஸ்ட்ரி, இ.என்.டி. ஜெனரல் மெடிசின், ஜெனரல் சர்ஜரி, ஆப்தமாலஜி, ஆர்தோபெடிக்ஸ், ரேடியோகிராபி, சைகியாட்ரி, யூராலஜி, கார்டியாலஜி, உள்ளிட்ட 25 மருத்துவ பிரிவில் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.06.2016ந் தேதியில் 33 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

நேரடி நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் ரூ. 1000/- மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ரூ. 800/- கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

மாதிரி விண்ணப்படிவத்தை நிரப்பி அத்துடன் தேவையான சான்றிதழ்களை சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பக்கட்டணத்தை டிடியாக எடுத்துக் கொண்டு நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம். 11.05.2017 மற்றும் 12.052017 தேதிகளில் நேர்க்காணல் நடைபெறுகிறது. மேலும் தகவல் பெற www.aiimsbhubaneswar.edu.in என்ற இணயதள முகவரியை அனுகவும்.

ராய்ப்பூரில் 205 பணியிடங்கள்

ராய்ப்பூரில் எய்ம்ஸ் கிளையில் சீனியர் ரெசிடன்ட் பணிக்கு 105 பேரும், ஜூனியர் ரெசிடென்ட் பணிக்கு 100 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். 22 மருத்துவ பிரிவுகளில் பணிகள் உள்ளன. 33 வயதுக்கு உட்பட்டவர்கள் சீனியர் ரெசிடென்ட் பணிக்கும், 30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஜூனியர் ரெசிடென்ட் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பப்படிவம், சான்றிதழ் நகல்கள், கட்டண டிடி ஆகியவற்றுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். சீனியர் ரெசிடென்ட் பணிக்கு 15.05.2017 மற்றும் 22.05.2017 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடக்கிறது. மேலும் தகவல்களுக்கு www.aiimsraipur.edu.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
The All India Institute of Medical Sciences is abbreviated as Aims. The application has been requested to fill Senior Resident and Junior Resident Jobs.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia