எய்ம்ஸ் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு 2017

Posted By:

புது டெல்லி : ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (எய்ம்ஸ்) புது டெல்லி இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவை சிகிச்சை படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வினை நடத்தி வருகிறது. இந்த நுழைவுத் தேர்வு 28 மே 2017 அன்று நடைபெறும் என தெரிவித்துள்ளது.

எய்ம்ஸ் ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியது இருந்தால் விண்ணப்பதாரர்கள் திருத்தங்களை செய்யலாம் என அறிவித்துள்ளது.

எய்ம்ஸ் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு 2017

மார்ச் 15 மாலை 5 மணி வரைக்கும் விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் செய்யலாம் என அறிவித்துள்ளது.

செய்யப்பட்ட திருத்தங்களை மார்ச் 27ம் தேதி சரிப்பார்த்துக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.

ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான வழிமுறைகள்

அலுவலக இணையதளத்திற்குள் உள் நுழையவும், பொருத்தமான தெரிவை கிளிக் செய்யவும்,

விண்ணப்பதாரர் ஐடி, மற்றும் பார்ஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்து பின்பு கேப்ட்சா கோடினை அதற்கென கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் பதிவு செய்யவும்

கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் அனைத்து தகவல்களையும் பதிவு செய்து சமர்ப்பிக்கவும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை -

இந்தத் தேர்வு ஒரு கணிணிச் சார்ந்த தேர்வாகும். இந்தத் தேர்வு மூன்று மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெறும்.

இந்தத் தேர்வில் 200 புறநிலை வகை வினாக்கள் கேட்கப்படும். (மல்டிபுல் ஜாய்ஸ் வகை கேள்விகள் கேட்கப்படும்)

இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் பொது அறிவுப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

சரியான பதிலுக்கு ஒரு மார்க் வழங்கப்படும் . தவறான கேள்விகளுக்கு நெகட்டிவ் மார்க் உண்டு.

பதில் அளிக்கப்படாத கேள்விகளுக்கு மார்க் இல்லை.

முக்கிய தேதிகள் -

எய்ம்ஸ் எம்பிபிஎஸ் தேர்வு நடைபெறும் நாள் - 28 மே 2017 ஞாயிற்றுக் கிழமை

தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் - 14 ஜீன் 2017 புதன் கிழமை

மேலும் விபரங்களுக்கு இணையதள முகவரியை அனுகவும்.

English summary
The All India Institute of Medical Sciences (AIIMS)-New Delhi is all set to conduct the Bachelor of Medicine, Bachelor of Surgery (MBBS-2017) entrance exam on Sunday, May 28, 2017.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia