ஏஐஐஎம்எஸ் பல் மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!!

Posted By:

சென்னை: ஏஐஐஎம்எஸ் நடத்தும் அகில இந்திய பட்டமேற்படிப்பு பல் மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

பல் மருத்துவப் படிப்புகளில் பட்டமேற்படிப்புகள் படிக்க ஏஐஐஎம்எஸ் சார்பில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த படிப்புகள் 2016-17-ம் கல்வியாண்டில் தொடங்கும்.இந்தத் தேர்வுகள் டிசம்பர் 13-ம் தேதி நடத்தப்பட்டன. இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்றோர் எம்டிஎஸ் படிப்புகளில் சேர்க்கப்படுவர்.

ஏஐஐஎம்எஸ் பல் மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!!

இந்தத் தேர்வு முடிவுகளை ஏஐஐஎம்எஸ் இணையதளத்தில் காணலாம். நாடு முழுதிலுமுள்ள பல் மருத்துவக் கல்லூரிகளில் இவர்கள் சேர்ந்துகொள்ளலாம்.

இந்தத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு கல்லூரிகளில் சேர்க்கப்படுவர்.

தேர்வு முடிவுகளைக் காண இங்கு கிளிக் செய்யவும்....https://www.aiimsexams.org/index.html

மதிப்பெண் பட்டியலை இங்கு டவுன்லோடு செய்துகொள்ளளாம்.

English summary
The results for All India Institute of Medical Sciences (AIIMS) All India Post Graduate Dental Entrance Examination (AIPGDEE) 2015 has been declared at the official website of AIIMS. AIPGDEE was conducted on December 13, 2015 for admissions into MDS courses for the academic session 2016-17. The results for the written examination is declared and the candidates who have appeared for the same can download their marks sheet from the official website.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia