அரசு உதவிபெறும் பள்ளிகளில் கட்டண பெறும் அராஜகம் !!

Posted By:

தமிழக அரசின் உதவியோடு செயல்ப்பட்டு வரும் பள்ளிகள் சுயநிதி பள்ளிகளை போல் செயல்படுவதை அரசு கேள்வி கேட்க வேண்டும் . தமிழக அரசு இதனை கண்காணிக்க வேண்டும் .

கட்டுப்படுத்துமா அரசு உதவிபெறும் பள்ளிகளை தமிழக அரசுக்கு  கேள்வி

தமிழகத்தில் இருந்த பள்ளிகளின் பற்றாகுறையை ஈடுக்கட்ட அரசின் உதவி பெற்று 1950களில் மாணவர்கள் கல்வி கற்க உருவாக்கப்பட்டது ஆனால் அவற்றில் காலப்போக்கில் அந்த பள்ளிகளின் செயல்பாடுகள் மாற்றம் அடைந்துள்ளன . நிர்வாக மட்டுமே அரசு உதவிபெறும் பள்ளிகள் செய்ய முடியும் ஆனால் மற்ற அனைத்து பள்ளி நிர்வாக முறைகள் அனைத்தும் அரசு பள்ளிகளை ஒத்திருக்கும் .

அரசு பள்ளிகளை போல் மாணவர்களுக்கு தேவையான சீருடைகள் மற்றும் மத்திய உணவு அனைத்தும் அரசே வழங்கும் . மாணவர்களுக்கு எந்த கட்டணமும் செலுத்த அவசியமில்லை ஆனால் இன்றைய காலக்கட்டங்களில் அரசு உதவிபெறும் பள்ளிகள் மாணவர்களிடையே கட்டணம் வசூலித்தல் நடத்துகின்றது . இதனால் இத்தகைய அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மிகுந்த சிக்கலுக்கு ஆளாகிறார்கள் .

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பள்ளியில் பெயரை தக்கவைத்துகொள்ள பத்தாம் வகுப்புக்கு 9 ஆம் வகுப்பில் சரியாக படிக்க இயலாத மாணவர்களை நிறுத்த செய்து பள்ளியின் பெயரை தக்க வைத்து மாணவர்களின் வாழ்வை கேள்வி குறியாக்கி பல அரசு உதிபெறும்  பள்ளிகள் போலி நூறு சதவீகித தேர்ச்சி  பெயர் பெற்று செயல்படுகிறது . இதனை அந்தந்த மாவட்ட கல்வி உயர் அதிகாரிகள் இதனை கண்காணிக்க வேண்டும் . ஆனால் இத்தகைய தகவலகள் கல்வி உயர் அதிகாரிகள் கவனத்துக்கு செல்வதில்லை என்ற கருத்தும் நிலவுகின்றது .

அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அரசு வழங்கும் சலுகையை விடுத்து கிடுப்பிடி விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் . மேலும் நாளைய எதிர்கால மாணவர்களுக்கான பள்ளிகளை கண்காணிக்க வேண்டியது அரசின் கடமையாகும் . அரசு இனிமேலாவது நடவடிக்கை எடுக்குமா என்ற நம்பிக்கையில் மாணவர்கள் , புதிய திட்டங்களை கொண்டு வரும் அரசு ஏற்கனவே செயல்பட்டு வரும் பள்ளிகளை கண்காணிக்க வேண்டியது கடமையாகும் .

உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் என்னும் வரிகளுக்கு வாழ்வழிக்கும் கல்வி   நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவு ஆக அரசு இனி ஒரு தவறு செய்தால் அதனை தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விடாமல் தண்டிக்க வேண்டும் . அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அரசு ஆசிர்யர்களை நியமிக்க வேண்டும் , சாட்டையை சுழற்ற அரசு தவறும் போது அதன் சட்டையை கழற்ற மக்கள் துணிவார்கள் என்பது திண்ணம் .

சார்ந்த பதிவுகள்:

பள்ளிகளின் அடிப்படை வசதிக்கு அரசு செய்தது என்ன உயர்நீதிமன்றம் கேள்வி !! 

புதிய பள்ளி காலஅட்டவணை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் !!

English summary
here article tell about issues of Government aided schools

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia