அரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு எதிரான AICTE கடிதம் வெளியானது!

அரியர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அறிவித்த சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்ச்சியை ஏற்க முடியாது என அண்ணா பல்கலைக் கழகத்திற்கு ஏஐசிடிஇ எழுதிய கடிதம் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு எதிரான AICTE கடிதம் வெளியானது!

 

கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியர் தேர்விற்கு கட்டணம் செலுத்தி தேர்விற்காகக் காத்திருந்த மாணவர்களுக்கு தேர்வு இல்லாமலேயே தேர்ச்சி என தமிழக முதலமைச்சர் அன்மையில் அறிவித்தார்.

இதற்கு மாணவர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தாலும் கல்வியாளர்கள் மத்தியில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, இந்த தேர்ச்சியை ஏற்க முடியாது என ஏஐசிடிஇ சார்பில் அண்ணா பல்கலைக் கழகத்திற்குக் கடிதம் அனுப்பியதாகத் தகவல் வெளியானது.

அதில், தேர்வு எழுதாமல், அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கக்கூடாது என்றும், இந்த உத்தரவை மீறும் பட்சத்தில் பல்கலைக்கழக அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அரியர் மாணவர்கள் தேர்ச்சி குறித்து ஏஐசிடிஇ-விடம் இருந்து எந்த ஒரு கடிதமும் வரவில்லை என தமிழக அரசு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த கடிதம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AICTE to Anna University: May withdraw approval if arrears Exam cancelled order
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X