பிசிஏ, பிபிஏ படிப்புகளுக்கு அங்கீகாரம் கோரும் விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு...!

தமிழகத்தில் பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கு கல்லூரிகள் அங்கீகாரம் கோரி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களைப் பெற www.aicte.india.org என்ற இணையதள முகவரியை தொடர்புகொண்டு அறியலாம்.
இதுதொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வரும் 2024-25 கல்வியாண்டுக்கான பிபிஏ, பிஎம்எஸ், பிசிஏ படிப்புகளை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ அனுமதி பெறும் நடைமுறை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதி பெற்றால் மட்டுமே ஏஐசிடிஇயின் திட்டங்கள் மற்றும் அதன் பலன்களை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் பெற முடியும். இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இப்படிப்புகளை வவங்கும் உயர்கல்வி நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக நாடு முழுவதும் 100 உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பிசிஏ, பிபிஏ படிப்புகளுக்கு அங்கீகாரம் கோரும் விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு...!

பிபிஏ, பிசிஏ படிப்புக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மார்ச் 25-ம் தேதி நிறைவு பெறவுள்ளது. தற்போது கல்லூரிகளின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 1-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி www.aicte.india.org என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை உயர்கல்வி நிறுவனங்கள் மேற்கண்ட வலைத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

பிபிஏ, பிசிஏ படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளுக்கான அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க ஏற்கெனவே 3 முறை அவகாசத்தை ஏஐசிடிஇ சார்பில் நீட்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது 4-வது முறையாக விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே சம்பந்தப்பட்ட கல்லூரிகள் இதைப் பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பித்து உரிய அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The All India Council for Technical Education (AICTE) has extended the last date for submission of applications by BBA/BCA/BMS colleges till April 1, 2024, 5 pm. The last date to pay the Technical Education Regulatory Fee (TER) has also been extended. The exact last date to pay TER Charges will be announced soon. The AICTE will regulate undergraduate courses in Management (BBA/BMS) and Computer Application (BCA) along with postgraduate courses in Management (MBA/MMS) and Computer Applications (MCA) from the 2024-25 academic year. Accordingly, all the existing institutes offering or intending to offer UG courses in Management (BBA/BMS) and Computer Applications (BCA) are required to get AICTE’s approval.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+