வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு.. துணைவேந்தர் ராமசாமி அறிவுப்பு..!

Posted By:

சென்னை : வேளாண் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த கிருத்திகா தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார்.

தரவரிசைப் பட்டியலில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கிருத்திகா முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். தர்மபுரி மாவட்டம் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவி சவுமியா 4வ து இடத்தைப் பிடித்து சாதித்துள்ளார்.

வேளாண் படிப்புகளுக்கான 2820 இடங்களுக்கு ஜூன் 16ல் முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு.. துணைவேந்தர் ராமசாமி அறிவுப்பு..!

சிறப்பு பிரிவினருக்கு ஜூன் 16ந் தேதி கலந்தாய்வு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 19 முதல் 24 வரை பொதுப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

தொழிற்கல்வி படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூன் 28ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள், நிறுவனங்களுக்கான கலந்தாய்வு ஜூன் 30ந் தேதி நடைபெறவிருக்கிறது.

ஜூலை 12ந் தேதி முதல் 15ந் தேதி வரை 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 24ந் தேதி முதல் வேளாண் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கும் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி அறிவித்துள்ளார்.

English summary
Tamil Nadu Agricultural University Vice Chancellor Ramaswamy told Agriculture counselling rank list 2017 released. Namakkal district kirthika first place.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia