இன்று தொடங்க இருந்த வேளாண்மை படிப்பின் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நிறுத்தப்பட்டுள்ளது . தமிழகத்தில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை அடுத்து நீட் தேர்வு காரணமாக மருத்துவ கவுன்சிலிங் தொடங்க விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டது. இதனிடையே வேளாண்மை கவுன்சிலிங் கடந்த ஜூன் 19ல் தொடங்கி 24 வரை நடைபெற்றது.

மருத்துவம் பொறியியல் கவுன்சிலிங் நடக்கமல் வேளாண் கவுன்சிலிங் நடத்துதல் சரியன்று என சட்டசபையில் விவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது . ஆனால் மருத்துவ கவுன்சிலிங் இந்த ஆண்டு தள்ளிபோக நீட் தேர்வு மட்டுமே காரணமாகும். இதனால் வேளாண்மை படிப்பிற்க்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் வேளாண்மை, தோட்டக்கலை உட்பட பதின்மூன்று படிப்புகளை உள்ளடக்கிய பாடப்பிரிவுகளுக்கான கவுன்சிலிங்கில் மொத்தம் 50ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர் . அவர்களுக்கான தரவரிசை வெளியிடப்பட்டது . முதல்கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை12ல் தொடங்கி 15ல் முடிவாதாக இருந்தது ஆனால் மருத்துவ கவுன்சிலிங் முடிந்தபின்பு வேளாண்மை கவுன்சில் நடத்தலாம் என வேளாண்மை பல்கலைகழகம் முடிவெடுத்துள்ளது. இதன்படி மருத்துவ கவுன்சில் முடிந்தபின் வேளாண் கலந்தாய்வு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதனிடையே நீட் தேர்வு மதிபெண் மற்றும் மருத்துவ தரவரிசையில் மருத்துவ படிப்பு கிடைக்கும் என்பதால் வேளாண் பல்கலைகழகத்தில் கட்டணம் செலுத்தியும் மருத்துவம் சேர்க்கையில் முனைபோடு இருப்பாதால் வேளாண்மை பல்கலைகழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட கலந்தாய்வு நிறுத்தப்பட்டுள்ளது.
சார்ந்த படிப்புகள்:


Click it and Unblock the Notifications












