+2க்கு அப்புறம் என்னெல்லாம் படிக்கலாம்- குழப்பத்தை தீர்க்க ஒரு குட்டி ”கோர்ஸ் சார்ட்”!

சென்னை: பொதுவாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் தங்களுக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கும் அளவுகோல் மிகவும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடிந்து விடுகிறது.

தனக்குத் தெரிந்தவர்கள் தேர்ந்தெடுத்து வெற்றி கண்ட துறையையே தனக்குமான எதிர்காலமாக நம்புவது, பெற்றோர்களின் வற்புறுத்தலின்படி ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பது, நண்பர்களை விட்டுப் பிரியாமல் இருக்க அனைவரும் ஒரே கோர்ஸில் சேர்வது என்றெல்லாம் முடிவெடுக்கவே கூடாது.

எந்தத் துறைக்கான தேவை தற்போது அதிகமாக உள்ளது, அதில் நமக்கு விருப்பம் இருக்கிறதா, அதற்கான போட்டியில் நமக்கான இடத்தை நம் மதிப்பெண்கள் நமக்கு பெற்றுத் தந்து விடுமா என்பவை உள்ளிட்ட செறிவான அறிவுடனும், விசாலமான பார்வையுடனும் நமக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

 பெருகும் தேவைகள்:

பெருகும் தேவைகள்:

காரணம் படித்து முடிக்கும்போதே.. பல நேரங்களிலும் கேம்பஸ் இன்டர்வியூ உபயத்தால் முடிக்கும் முன்னரே பல ஆயிரங்கள் சம்பளத்தோடு உடனடி வேலை.. சில வருடங்களிலேயே லட்சத்தை தொடும் அளவுக்கு சம்பள உயர்வு.. வெளிநாட்டு வேலை வாய்ப்பு.. என இத்துறையில் பெருகிக் கொண்டே இருக்கும் தேவைகள்தான்.

 கல்லூரிக்கா, கோர்ஸுக்கா:

கல்லூரிக்கா, கோர்ஸுக்கா:

பி.இ படிப்பைப் பொறுத்தவரை உங்களின் கட் ஆப் மார்க் 180 க்கு மேலே இருந்தால், கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்து கோர்ஸை தேர்ந்தெடுங்கள். அதற்குக் கீழ் என்றால், கோர்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்லூரியை தேர்ந்தெடுங்கள்.

 மோஸ்ட் வான்டட் துறைகள்:

மோஸ்ட் வான்டட் துறைகள்:

காலத்துக்கேற்ப அத்தனை புதிய மாற்றங்களையும் வாரி எடுத்து வளர்ந்து வரும் பொறியியல் கல்வியில், இப்போது இன்னும் புதுப் புதுத் துறைகள் வந்துள்ளன. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருக்கும் துறைகளை விட, இன்று இவைதான் மோஸ்ட் வான்ட்டட் ஆக உள்ளன.

 கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்:

கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்:

விண்வெளி ஆய்வுத் துறைகள், பாதுகாப்புத் துறைகள், அரசு, தனியார் விமான நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஏரோஸ்பேஸ் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது.

 சிறப்பு நுழைவுத்தேர்வுகள்:

சிறப்பு நுழைவுத்தேர்வுகள்:

இது சென்னை ஐ.ஐ.டி, மும்பை ஐ.ஐ.டி, கான்பூர் ஐ.ஐ.டி, கோவை, அமிர்தா யூனி வர்சிட்டி மற்றும் சென்னை, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் போன்றவற்றில் உள்ளது. இங்கெல்லாம் இதற்கான சிறப்பு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்கின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
what are the courses present after plus two for a great future, some of that here listed.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X