ஹை... ஜாலி... இனி ஐஐடி மாணவர்கள் ஜிலு ஜிலு ஏசி வசதியுடன் படிக்கலாம்..!!

Posted By:

டெல்லி: ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் இனி மாணவர்கள் ஜிலு ஜிலு ஏசி வசதியுடன் படிக்க முடியும். அடுத்த கல்வியாண்டில் (2016-17) ஐஐடி கல்வி நிறுவனங்களில் பயிற்சிக் கட்டணத்தை அரசு மூன்று மடங்கு உயர்த்தியுள்ளது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஐஐடி மாணவர்களுக்கு முழு ஏசி வசதியுடன் கூடிய ஹாஸ்டல்கள் அமைத்துத் தரப்படவுள்ளது. மேலும் ஹாஸ்டல்களில் நவீன சமையலறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து தரவுள்ளது ஐஐடி நிர்வாகம்.

ஹை... ஜாலி... இனி ஐஐடி மாணவர்கள் ஜிலு ஜிலு ஏசி வசதியுடன் படிக்கலாம்..!!

நாட்டிலுள்ள 18 ஐஐடிகளில் இந்த நவீன வசதிகள் செய்து தரப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெயில் வாட்டி வதைப்பதால் ஜிலு ஜிலு ஏசி வசதியை செய்து தர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சமீபத்தில் டெல்லி ஐஐடி வந்த மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஹாஸ்டலைப் பார்வையிட்டு மாணவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தருமாறு உத்தரவிட்டார்.

அப்போது ஹாஸ்டல் சமையலறை, மாணவர் கூடுமிடம் உள்ளிட்ட இடங்களைப் பார்த்தார். மேலும் மாணவர்களுடனும் அவர் கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. தற்போது டெல்லி ஐஐடி-யின் ஹாஸ்டல்களில் அனைத்து அறைகளும் ஏர் கூலர் வசதி செய்து தரப்படவுள்ளது.

English summary
IIT students can look forward to some cool accommodation, as all new hostels will be centrally air-conditioned. The human resource ministry, which recently ordered a fee hike at Indian Institutes of Technology, planned to modernise hostels including air-conditioned common areas and stateof-the-art kitchens, sources said. At the country’s top engineering schools, which also enjoy a good standing worldwide, students have to live in hostels. Currently, around 80,000 students are enrolled in 18 IITs, a majority of them are in areas where summer in harsh. Five more colleges are in the pipeline. HRD minister Smriti Irani paid a surprise visit to two hostels at IIT Delhi on Friday. She inspected the kitchen, halls and talked to the students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia