ஐபி தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு அட்மிட் கார்டு வெளியீடு

Posted By:

இண்டலிஜண்ட் பிரோ வழங்கும் அஸிஸ்டெண்ட் சென்ரல் ஏஜென்ஸி ஆஃபிஸர்  ஐபி பணிக்கு தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பத்திருப்பவர்களுக்கு அட்மிட் கார்டு  வெளியிடப்பட்டுள்ளது. 1430 பணியிடங்களுக்கான அறிவிப்பில் விண்ணப்பித்தோருக்கான தேர்வு எழுதுவதற்கான அனுமதி கடிதம் டவுன்லோடு செய்யலாம் .

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஐபி தேர்வுக்கு அட்மிட் கார்டு வெளிட்டுள்ளது

அஸிஸ்டெண்ட் இண்டலிஜெண்ட் ஆஃபிஸர் பணியிடங்களுக்கான டயர் 1 தேர்வு அக்டோபர் 15ஆம் நாள் நடைபெற இருக்கிறது . ஐபி அஸிஸ்டெண்ட் ஆஃபிஸர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 18 முதல் 25 வயதுக்குள் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது . அங்கிகரிக்கப்பட்ட அதிகாரபூர்வ பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

ஐபி தேர்வுக்கான அட்மிட் கார்டினை டவுன்லோடு செய்ய மத்திய மனிதவள மேம்ப்பாடு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தினை இணைத்துள்ளோம் . அவ்விணைப்பில் சென்று அனுமதிகடிததிற்கான இணைப்பில் சென்று பதிவு எண் மற்றும் பாஸ்வோர்டு கொடுக்க வேண்டும் .

ஐபி தேர்வுக்கான பதிவு எண் , பாஸ்வோர்டு கொடுத்தப்பின் உங்களுக்கான தேர்வு தேதி, புகைப்படம் மற்றும் தேர்வு மையத்தின் விவரங்கள் அடங்கிய விவரத்தை கொடுக்க வேண்டும் . மேலும் தேர்வறை விவரம் அத்துடன் தேர்வு குறித்து செய்ய வேண்டிய செய்யகூடாத விதிமுறைகள் அடங்கிய அட்மிட் கார்டு பெறுவீர்கள் . தேர்வு அறைக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை எடுத்து செல்ல வேண்டும் .

சார்ந்த பதிவுகள்:

மத்திய உளவுத்துறையின்கீழ் பணியாற்ற அறிவுப்பு வெளியீடு 

English summary
here article tell about IB admit card for exam

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia