சட்டப்படிப்புகளுக்கான மாணவர்கள் கலந்தாய்வு தொடங்கியது ஆகஸ்ட் 5 வரை நடைபெறும்

Posted By:

தமிழ்நாடு சட்டபல்கலைகழகத்தில் 5 ஆண்டு படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது . தமிழ்நாட்டில் பிஏஎல்எல்பி ஐந்து வருட சட்டப்படிப்புகளுக்கான கல்லுரியில் சேர்க்கைகான முதல் பத்து பேர்க்கு கொடுக்க ஆணையை தமிழ்நாடு அரசு சட்ட செயலர் எஸ்எஸ். பூவலிங்கம் வழங்கினார்.

சட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வில் மாணவர்கள் சேர்க்கை ஆணை வழங்கப்பட்டு வருகின்றது

தமிழ்நாடு சட்ட பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் சென்னை, இராமநாதா புரம், விழுப்புரம், தமிழ் நாடு, கோவை, திருச்சி , திருநெல்வேலி, செங்கல்ப்பட்டு வேலுர், விழுப்புரம், தருமபுரி போன்ற பத்து பகுதிகளில் சட்ட கல்லுரிகள் இயங்குகின்றன. இந்த சட்டக்கல்லுரிகளில் ஐந்து வருட சட்டப்படிப்பில் சேர 1372 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 9504 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவற்றில் 360 விண்ணப்பங்கள் தகுதியற்றவையாக கருதப்பட்டன. மீதமுள்ள 9144 விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டன.

இந்த விண்ணப்பங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றன . பொது பிரிவுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது . இந்த கலந்தாய்வில் மாணவர்களின் மதிபெண பட்டியலின்படி மாணவர்கள் தரவரிசைப் படுத்தப்படுள்ளனர். பொது பிரிவில் கோவை, மதுரை , சென்னை என மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை கொடுக்கப்பட்டது . சென்னை கீரின்வேஸில் உள்ள தமிழ்நாடு அம்பேத்கர்  சட்டப் பல்கலைகழகத்தில் மாணவர்களுக்கான   சேர்க்கையானது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 5 வரை இந்த கவுன்சிலிங் தொடர்ந்து நடைபெறும் . மாணவர்கள் சேர்க்கை முடிந்தப்பின் வகுப்பு தொடங்கப்படும் .

இந்தியாவின் கட்டமைப்பு சட்டம் பயின்ற மாணவர்களின் கட்டமைப்பில்தான அமைந்தது . சட்ட வல்லுநர்களால் தான் தேசத்தின் கட்டமைப்பு அமைந்தது . அத்தகைய திறன் வாய்ந்த சட்ட வல்லுநர்களால் அமைக்கப்பட்ட பாதைகளில் பொது மக்களான நாம் பயணிக்கின்றோம் . அத்தகைய மதிப்பு மிக்க படிப்பினை படிப்பதில் மாணவர்களுக்கு என்றும் பெருமிதமாகும் .

சார்ந்த பதிவுகள்:

பள்ளி கல்லுரிகளில் சட்டம் பாடமாக்கப்பட சட்டத்துறை அமைச்சர் அறிவிப்பு 

English summary
here article tell about law counselling for tamilnadu law students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia