யோகாவுக்கான முதுகலை பட்டபடிப்பு சேர்க்கை !!

Posted By:

யோகா படிப்புக்கான முதுகலை பட்டம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்கமானது தனது அறிவிப்பில் யோகா படிப்புகளுக்கான முதுகலை பட்டம் பெற விண்ணப்பிக்க அறிவிப்பினை வெளியிட்டுள்ளது . சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மருத்துவ கல்லுரியில் யோக படிப்புகளுக்கு 15 இடங்கள் உள்ளன .

யோகா முதுகலைப்பட்ட படிப்புக்கான  சேர்க்கைக்கு விண்ணப்பிக்கவும்

யோகா படிப்புக்கான முதுகலை பட்டத்தை பெற மாணவர்கள் இந்திய மருத்துவ ஹோமியோபதி இயக்கம் அறிவித்துள்ள  இணையத்தளத்தில் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் . நேரடி விண்ணப்பம் பெறும் முறை இல்லை . விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 3000 செலுத்த வேண்டும் . தாழ்த்தப்பட்டோர் , பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது .

நுழைவுதேர்வு :

யோகா படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய இறுதிநாள் செப்டம்பர் 28 ஆகும் . இப்படிப்புகளுக்கான நுழைவுதேர்வு அக்டோபர் 21 ஆம் நாள் நடைபெறும் . நுழைவுதேர்வு நடைபெறும் இடமானது அறிஞர் அண்ணா அரசு மருத்துவமணை வளாகம் அன்றே மாணவர்களுக்கான நுழைவுதேர்வு முடிவும் அறிவிக்கப்படும் . அதனை தொடர்ந்து கலந்தாய்வு நடத்தி மாணவர்களுக்கான இடங்கள் வழங்கப்படும். விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் . யோகா படிப்புகளுக்கான நுழைவுதேர்வு அக்டோபர் 21 ஆம் நாள் காலை  9.30 மணிக்கு தொடங்கும் . அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுவதால் தேவையற்ற அலைச்சல்கள் தடுக்கப்படுகிறது . மாணவர்களுக்கான இடங்களின் விவரம் உறுதிசெய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

சார்ந்த படிப்புகள்:

சித்தா, யுனானி , யோகா, ஹோமியோ படிக்க போறிங்களா உங்களுக்கான நியூஸ் ,,! 

வாழும் கலை மற்றும் வாழ்வின் எளிய மருத்துவம் யோகா

English summary
here article tell about yoga master degree admissions

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia