ஜெட் வேகத்தில் ஆர்.கே. நகர் ஐ.டி.ஐ. பணிகள்... விண்ணப்ப விநியோகம் தொடக்கம்!!

Posted By:

சென்னை: சென்னை ஆர்.கே. நகர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில்(ஐ.டி.ஐ.) ஜெட் வேகத்தில் பணிகள் தொடங்கின. ஐடிஐ-யில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் நேற்று தொடங்கியுள்ளன.

ஆர்.கே. நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வர் ஆனார். தேர்தலின்போது ஆர்.கே. நகரில் ஐடிஐ தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி ஐடிஐ தொடங்குவதற்கான முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.

ஜெட் வேகத்தில் ஆர்.கே. நகர் ஐ.டி.ஐ. பணிகள்... விண்ணப்ப விநியோகம் தொடக்கம்!!

அறிவிப்பு வெளியிட்ட சில நாட்களில் பணிகள் ஜெட் வேகத்தில் தொடங்கியுள்ளன. புதுவண்ணாரப்பேட்டை இருசப்பன் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இந்தப் பயிற்சி நிலையம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

ஃபிட்டர், எல்க்ட்ரீசியன், கம்மியர் மோட்டார் வாகனம் (எம்எம்வி) ஆகிய பாடப் பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப விநியோகத்தை ஊரகத் தொழில்கள், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ப.மோகன் நேற்று தொடக்கிவைத்தார்.

இதைத் தொடர்ந்து, அருணாசல ஈஸ்வரன் தெரு, காமராஜர் சாலை என்ற முகவரியில் நிரந்தர கட்டடங்கள் அமையவுள்ள இடத்தையும் அவர் பார்வையிட்டார்.

ஆய்வின்போது வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநர் சி.சமயமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.அழகுமீனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

English summary
Tamilnadu Labour welfare Minister Mohan has inaugurated RK Nagar ITI admission applications distribution yesterday in Chennai.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia