அப்பப்ப ஜூஸ் குடிங்க.. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நமீதா அட்வைஸ்!

Posted By:

சென்னை : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மிகவும் நெருங்கி விட்டது. 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு இன்னும் இரு தினங்களே உள்ளன. இது மாணவர்கள் பரபரப்பாக இருக்கக் கூடிய நேரம் ஆகும். இந்த நிலையில் சோசியல் மீடியாக்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பல்வேறு தரப்பிலும் இருந்து மாணவர்களுக்கு பல்வேறு அட்வைஸ்கள் குவிந்த வண்ணமாக இருக்கின்றன.

மேலும் சினிமா நடிகைகளில் ஒருவரான நமீதாவும் மாணவர்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார். 'எங்கள் அண்ணா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நமீதா. நமீதா என்றால் தெரியாதவர்கள் ஒருவரும் இருக்க முடியாது. சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரைக்கும் மிகவும் குறுகிய காலத்திலேயே பிரபலமானவர் நடிகை நமீதா.

அப்பப்ப ஜூஸ் குடிங்க.. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நமீதா அட்வைஸ்!

நமீதா அவர்கள் மாணவர்களுக்கு என்ன அட்வைஸ் சொல்லி இருக்காங்கனா மாணவ மாணவியர்கள் தொடர்ந்து பல மணி நேரம் படிக்கிறார்கள். அவ்வாறு படிக்கும் போது இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து தண்ணீர் குடிக்க வேண்டும். அல்லது இளநீர், பழச்சாறு போன்ற பானங்களை குடிக்க வேண்டும். இது போன்ற நீர் ஆகாரங்கள் மாணவர்களின் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என நடிகை நமீதா கூறியுள்ளார்.


உடல் பலவீனமாகிறதற்கு முக்கியக் காரணம் நீர்ச்சத்துக் குறைவுதான். எனவே மாணவர்கள் ஒரே இடத்திலிருந்து ரொம்ப நேரம் படிக்கும் போது அவர்கள் உடம்பு இயல்பாகவே சூடாகிவிடும். எனவே மாணவர்களே நடிகை நமீதா அவர்கள் கூறிய அறிவுரையின் படி நீங்கள் செய்யும் போது அது உங்கள் உடலுக்கும் மனதிற்கும் உற்சாகத்தைத் தரும்.

நொங்கு, பதநீர், இளநீர், பழச்சாறு, போன்ற குளிர் பானங்கள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியதாகும். வரும் காலம் கோடைக் காலம் என்பதால் மாணவர்களே இது போன்ற இயற்கை குளிர் பானங்களைக் கட்டாயம் அருந்தி உடல் நலத்தைப் பேணிப்பாதுகாத்துக் கொள்ளுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். நல்ல உடல் நிலை இருந்ததால்தான் நன்றாக தேர்வினை எதிர்கொள்ள முடியும்.

English summary
actress namitha has advised for students. two or three hours ones students drink water or Juice when you are studying .

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia