சென்னை: குவாலியர் நகரில் அமைந்துள்ள அடல்பிகாரி வாஜ்பாய் - இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலஜி(ஏபிவி-ஐஐஐடிஎம்) உயர் கல்வி நிறுவனத்தில் பிஎச். டி படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி பிரிவில் பிஎச்.டி படிப்பை மாணவர்கள் இங்கு படிக்க முடியும்.

இந்த உயர் கல்வி நிறுவனமானது விஸ்வேஸ்வரய்யா பிஎச்.டி. திட்டத்தின் கீழ் இந்த படிப்பை வழங்குகிறது.
இந்த படிப்பைப் பயில என்ஜினீயரிங் அல்லது டெக்னாலஜி பிரிவில் எம்இ, அல்லது எம்டெக் முடித்திருக்கவேண்டும்.
ஆன்-லைனில் மட்டுமே இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,500 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.800 கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் கேட் ஸ்கோர் கார்டை ஸ்கேன் செய்து ஆன்-லைனில் அனுப்பவேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி டிசம்பர் 25 ஆகும். தேர்வு செய்யப்படுபவர்கள் டிசம்பர் 30-ம் தேதி அறிவிக்கப்படுவர். மேலும் இதற்கான நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு 2016-ம் ஆண்டு ஜனவரி 2, 3-ம் தேதிகளில் நடைபெறும்.


Click it and Unblock the Notifications












