அடிச்சாம் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரு..! 22 வயது இளைஞருக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளம்!!

Posted By:

சென்னை: 22 வயது இளைஞருக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளம் தருவதாக கூகுள் நிறுவனம் அழைத்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் அபிஷேக் பந்த். 22 வயதான இவருக்கான இந்த ஆஃபரை வழங்கியுள்ளது கூகுள் நிறுவனம். இவர் காரக்பூர் ஐஐடியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வரும் மாணவர். கம்ப்யூட்டர் அறிவியல் தொடர்பான பல்வேறு டெக்னிக்கல் விஷயங்களில் கிங்கான இவரது திறமையைப் பார்த்து இந்த வேலையை வழங்கியுள்ளது கூகுள்.

அடிச்சாம் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரு..! 22 வயது இளைஞருக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளம்!!

அதாவது கூகுள் நிறுவனத்தின் டிசைன் தீர்வுகள் மையத்தில் அவருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. மேலும் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்தைத் தருவதாகவும் அறிவித்துள்ளது. இதுபோன்ற ஆஃபரை யாருக்கும் கூகுள் வழங்கியுள்ளது. இதன்மூலம் இந்திய மாணவர் ஒருவருக்கு இவ்வளவு சம்பளத்தைக் கொடுத்து சாதனை புரிந்துள்ளது கூகுள்.

குறைந்த வயதில் இவ்வளவு சம்பளத்தைப் பெறப்போகும் மாணவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் அபிஷேக் பந்த். அவர் அடுத்த ஆண்டு செப்டம்பரில் இந்தப் பணியில் சேர்வார். ஐஐடியில் கடைசி ஆண்டு படைத்து வரும் அபிஷேக், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள கூகுள் நிறுவனத்தில் சேர வுள்ளார். இவர் சிபிஎஸ்இ கல்வி வழியில் 10--ம் வகுப்பு படித்த முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia