"சிக்ஸர் சிங்கம்" ஏபி டிவில்லியர்ஸ் என்ன படிச்சிருக்காருன்னு தெரியுமா உங்களுக்கு!

Posted By:

சென்னை : ஐபில் கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும், தென் ஆப்பிரிக்காவின் 33 வயதான ஏபி டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டில் கிங்காக அசத்தி வருகிறவர் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அவரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம்.

ஏபி டிவில்லியர்ஸ் பிப்ரவரி 17ம் தேதி 1984ம் ஆண்டு பிறந்தவராவார். கிரிக்கெட் கிங், சிக்ஸர் சிங்கம், சூப்பர் நேச்சுரல் பவர் கொண்டவர், ஏலியன் என்றெல்லாம் புகழாரம் சூட்டப்பட்டவர்.

ஏபி டிவில்லியர்ஸ் பேட்டிங் ஸ்டைலில் வலதுக்கை ஆட்டக்கரராக திகழ்பவர். பவுலிங் ஸ்டைலில் ரைட் ஆர்ம் மீடியம் பேஸ் உடையவராகத் திகழ்பவர். அர்ப்பணிப்பான ஆட்டக்காரராக ஏபி டிவில்லியர்ஸ் பல அரிய சாதனைகளை கிரிக்கெட்டில் செய்துள்ளார்.

சுயசரிதை

டிவில்லியர்ஸ் சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல நல்ல தலைமைத்துவம் வாய்ந்தவரும் ஆவார். இவர் தற்போது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவின் கேப்டனாக உள்ளார். மேலும் ஐபில் கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

குழந்தைப் பருவம்

Afrikaanse Hoër Seunskool என்னும் ஆப்பிரிக்காவின் மிகப் பிரபலமான ஸ்போர்ட்ஸ் பள்ளியில் 13 வயதில் சேர்க்கப்பட்டார் டிவில்லியர்ஸ். பள்ளியில் எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் சிறப்பாக ஆடி ஆர்வம் காட்டுவார். எல்லா விளையாட்டுகளிலும் அவரைச் சேர்த்தனர். கோல்ஃப், ரக்பி, டென்னிஸ், ஸ்விம்மிங் என எல்லாமே விளையாடினார். கிரிக்கெட்டில் சதங்களும், அரை சதங்களுமாக அடித்து, அடித்து இயல்பாக ஒரு கிரிக்கெட் வீரராக மாறினார் ஏபி டிவில்லியர்ஸ்.

சயின்ஸ் படித்தவர்

கிரிக்கெட் மட்டும் அல்ல, தென் ஆப்பிரிக்காவுக்காக டென்னிஸ் விளையாடினார்; ரக்பி விளையாடினார்; பள்ளிப்பருவத்தில் நீச்சல் போட்டிகளில் ஆறு சாதனைகள் படைத்திருக்கிறார். அறிவியல் ஆய்வுக்காக நெல்சன் மண்டேலா விருது வாங்கியிருக்கிறார். கிரிக்கெட்டில் மட்டும் கிங் இல்லை, எல்லா விடையாட்டுக்களிலும் ஏபி டிவில்லியர்ஸ் கிங்காக காணப்படுகிறார்.

21வயது இளைஞனாக

2004-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 21 வயது இளைஞனாக தென்ஆப்பிரிக்க அணிக்குள் நுழைந்தார் ஏ.பி.டி வில்லியர்ஸ். எல்லா சாதனை மன்னர்களையும்போல இவரும் தோல்வியுடன் தொடங்கியவர்தான். முதல் சதம் அடிக்க இரண்டு ஆண்டுகளுக்கும் மேலானது. 2007-ம் ஆண்டில் மேற்கு இந்தியத் தீவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிதான் டி வில்லியர்ஸ் கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனை. ஓப்பனிங் பேட்ஸ்மேனாகக் களமிறங்கியவர், லீக் போட்டிகளில் நான்கு முறை டக் அவுட் ஆனார்.

முதலிடத்தில்

ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் ஃபார்முக்கு வந்தார். 92 ரன்கள் எடுத்திருந்தபோது அவசரப்பட்டு ஓடி ரன் அவுட் ஆனார். முதல் சதம் அடிக்கும் வாய்ப்பு ஜஸ்ட் லைக் தட் மிஸ்ஸானது. ஆனால், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் 12 பௌண்டரி, 5 சிக்ஸர் விளாசி 146 ரன்கள் குவித்து தனது முதல் சதத்தை அடித்தார். அதன் பிறகு கடந்த எட்டு ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் 23 சதங்கள் விளாசி, தென் ஆப்பிரிக்க ஜாம்பவான்கள் கிரிஸ்டன், கிப்ஸ், காலிஸ், ஆம்லா என அனைவரது சாதனைகளையும் முறியடித்து முதல் இடத்தில் இருக்கிறார்.

சாதனைகள்

நியூஸிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் சிறப்பாக விளையாடி 262 ரன்கள் சேர்த்த டி வில்லியர்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். 33 வயதான டி வில்லியர்ஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடிப்பது இது 10-வது முறையாகும். அவர் முதன் முறையாக கடந்த 2010 மே மாதம் முதலிடத்தை கைப்பற்றியிருந்தார். 2009-ம் ஆண்டு செப்டம்பர் முதல் அவர் முதல் 5 இடங்களுக்கு வெளியே சென்றதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

அசத்தல் மன்னன்

ஆபிரகாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ்... உலகம் முழுக்க கிரிக்கெட் மைதானங்களில் சிக்ஸர், பௌண்டரிகளால் அதிர்வேட்டுகள் நிகழ்த்தும் அதிரடி நாயகன். ஒருநாள் கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து உலகம் முழுக்க ரசிகர்கள் அதிகமாக உள்ள நபர் இவர்தான். கிரிக்கெட் விமர்சகர்கள் என எல்லோரது லைக்ஸையும் அள்ளியிருக்கிறார் டி வில்லியர்ஸ். 16 பந்து களில் 50 ரன், 31 பந்துகளில் சதம், 64 பந்துகளில் 150 ரன் என அனைத்து வேகமான சாதனைச் சதங்களும் இவர் வசம்தான் உள்ளது.

சிக்ஸர் சிங்கம் மட்டுமல்ல சிங்கரும்

டி வில்லியர்ஸ் கிரிக்கெட் மட்டும் அல்ல, தென் ஆப்பிரிக்காவுக்காக டென்னிஸ் விளையாடினார்; ரக்பி விளையாடினார்; பள்ளிப்பருவத்தில் நீச்சல் போட்டிகளில் ஆறு சாதனைகள் படைத்திருக்கிறார். அறிவியல் ஆய்வுக்காக நெல்சன் மண்டேலா விருது வாங்கியிருக்கிறார். இதையெல்லாம் தவிர அவர் சிறந்த பாடகரும் ஆவார். தனது ஓய்வு நேரங்களில் பாடல்களைப் பாடுவது ஆல்பம் வெளியிடுவது போன்றவற்றிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பலவேறு திறமைகளை தன்னுள் அடக்கிய சிக்ஸர் சிங்கம் டி வில்லியர்ஸ் சூப்பரான பாகரும் ஆவார். ஏபி டிவில்லியர்ஸ் பாட்டு பாடி தனது மனைவியை மட்டுமில்லாமல் அவரது ரசிர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். பெங்களூரு ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணியின் யூடியூப் பக்கத்தில் டிவில்லியர்ஸ் பாடல்கள் பதிவேற்றப்பட்டுள்ளது. ஏபி டிவில்லியர்ஸின் பாடல் திறமையை கண்ட அவரது ரசிகர்கள் கிறங்கி போயியுள்ளனர்.

பௌலர்களை திணறவைப்பவர்

பந்தை பௌண்டரி நோக்கி அடிப்பார் அல்லது ரன் எடுக்க ஓடுவார். இந்த இரண்டு வகையில்தான் அவரை அவுட் செய்ய முடியும். கிளீன் போல்டு செய்ய வாய்ப்பே இல்லை. பௌலர்களையும் ஃபீல்டர்களையும் டி வில்லியர்ஸ் அளவுக்குக் குழப்பியவர்கள் யாரும் இல்லை. அவருடைய பாடிலாங்வேஜைப் பார்த்து டிரைவ் ஷாட் அடிக்கப்போகிறார் என ஃபீல்டர்கள் நினைத்தால், அது ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டாக மாறும். அதனால்தான் பௌலர்கள் அவருக்கு பந்து வீசத் திணறுகிறார்கள்.

டி வில்லியர்ஸ் கிரிக்கெட் வரலாறு

அப்பா, அம்மா, இரண்டு அண்ணன்கள் என வீட்டில் எல்லோருமே விளையாட்டு வீரர்கள். 10 வயதில் எனக்கும் விளையாட்டு ஆர்வம் தொற்றியது. அண்ணன்கள் மற்றும் அவரது நண்பர்களுடன் நானும் விளையாடுவேன். ஆனால், எனக்கு பேட்டிங் சான்ஸ் கடைசியில்தான் கொடுப்பார்கள். அதுவரை என்னை தண்ணீர் பாட்டில்கள் கொண்டுவரப் பயன்படுத்தி வெறுப்பேற்றுவார்கள். அதைக் கண்டுகொள்ளாமல் கடைசி பேட்ஸ்மேனாகக் களம் இறங்குவேன். என்னை வெறுப்பேற்றியவர்களை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே ட்ரிக் ஷாட் ஆடக் கற்றுக்கொண்டேன்' என செம ஜாலியாக தன் கிரிக்கெட் வரலாறு சொல்கிறார் ஏபிடி. மேலும் டான் பிராட்மேன், விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர் வரிசையில் கிரிக்கெட் உலகின் இந்தத் தலைமுறை நாயகன் ஏபிடி வில்லியர்ஸ்!

முழங்கை மூட்டு காயம்

முழங்கை மூட்டு காயத்தால் அவதிப்பட்டு வந்ததால் டி வில்லியர்ஸ்ஜோகன்னஸ்பர்க்: நியூசிலாந்து அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ளவில்லை. முதல் டெஸ்ட் டுனெடின் மைதானத்தில் மார்ச் 8ம் தேதி நடந்த டி20ல் தென்ஆப்பிரிக்கா 5 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்ரிக்கா அணியில் டி வில்லியர்ஸ் கலந்து கொள்ளவில்லை. அதே சமயம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதில்லை என்றும், 2019ல் நடைபெற உள்ள உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்

மீண்டும் களம் இறங்கினார்

இந்தூர்ரில் நேற்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிக்சர் மழையை பொழிந்து தனது வருகையை பறைசாற்றிய டி வில்லியர்ஸ், இந்த அதிரடிக்கு இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியம் நேற்று டிவில்லியர்ஸ் எனும் இடி முழக்கத்தை சந்தித்தது. முதுகு வலி காரணமாக ஓய்வில் இருந்து வந்த இந்த தென் ஆப்பிரிக்காவின் 360 டிகிரி பேட்ஸ்மேன், நேற்று இவ்வாண்டு ஐபிஎல் தொடரின் முதலாவது ஆட்டத்தில் காலடி எடுத்து வைத்தார். 46 பந்துகளை மட்டுமே சந்தித்த டிவில்லியர்ஸ் 89 ரன்களை குவித்தார். இதில் 9 சிக்சர்கள் அடங்கும். போனால் போகட்டும் என 3 பவுண்டரிகளை தட்டி விட்டார் என்றுதான் கூற வேண்டும். 102 மீட்டர் தூரத்திற்கு பறந்தன சில சிக்சர்கள். இருமுறை பந்துகளை மைதானத்திற்கு வெளியே சென்றுதான் எடுத்து வர வேண்டியதாயிற்று. நேற்று ஆடிய அதிரடி ஆட்டத்திற்கு தன் மனைவிக் கொடுத்த தன்னம்பிக்கையும் தைரியமும்தான் காரணம் எனக் கூறியுள்ளார்.

குடும்ப வாழ்க்கை

தென்ஆப்பிரிக்க ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் 2013ம் ஆண்டு தன் திருமண வாழ்க்கையை தொடங்கினார். அவரது மனைவியின் பெயர் டேனியலி இவர்கள் இருவருக்கும் 2015ம் வருடம் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கும் ஏபி டிவில்லியர்ஸ் எனப் பெயர் சூட்டப்பட்டது. குட்டி சிக்ஸர் சிங்கமான அவர் குழந்தைக்கும் அவர் பெயரே சூட்டப்பட்டுள்ளது. எனவே அவர் குழந்தையும் ஏபி டிவில்லியர்ஸ் என்றே அழைக்கப்படுகிறது.

சரித்திர சாதனை வீரர்

தன் வாழ்க்கை சரித்திரத்தில் சாதனைப் படைத்தவர்கள் அநேகர். ஆனால் தன்னுடைய சாதைனைகளால் சரித்திரம் படைத்த சரித்திர நாயகன் டி வில்லியர்ஸ் ஆவார். ஒருநாள் போட்டியின் சிறந்த வீரர் விருதுக்கு 2வது முறையாக 2015ம் ஆண்டில் டி வில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார். அவர் கடந்த 2010ம் ஆண்டிலும் இந்த விருதை பெற்றிருந்தார். டி வில்லியர்ஸ் 20 ஆட்டத்தில் 1,265 ரன்களை 79 என்ற சராசரியில் குவித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 128.4 ஆகும். 2 சதம் மற்றும் 9 அரை சதங்கள் அடித்துள்ளார். டி வில்லியர்ஸின் சக அணி வீரரான டு பிளெஸ்ஸி டி 20ல் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2015 ஜனவரி மாதம் ஜோகன்னஸ்பர்க்கில் வங்கதேசத் துக்கு எதிரான ஆட்டத்தில் 56 பந் தில், 11 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 119 ரன்களை விளாசினார் டு பிளெஸ்ஸி. இது சிறந்த ஆட்டமாக தேர்வாகி உள்ளது. சர்வதேச ஒருநாள் பேட்ஸ்மேன் 2017ம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்கா வீரரான டி வில்லியர்ஸ் மீண்டும் முதலிடம் பிடித்தார். பத்தாவது தடவையாக முதல் இடத்தைப் பிடித்துள்ள சரித்திர சாதனை வீரர் ஆவார்.

English summary
A livewire like no other, a merciless marauder and an absolute leader. AB, as he is called by the cricket fans all over the globe, isn’t just a cricketer. He is a champion sportsman with immensely versatile interests during his growing years.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia