ஆதார் அட்டை பள்ளி மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்படுள்ளது

Posted By:

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு பெறிருக்க வேண்டும் என தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு ஆதார்  வழங்க தொடக்க கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது

பள்ளிக் கல்வித்துறை :

பள்ளிக் கல்வித்துறையின் தொடக்க கல்வி அமைச்சர் பிறப்பித்த உத்தரவுப்படி 2017- 2018 ஆம் ஆண்டின் கல்வியாண்டில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை தொடக்க கல்வி இயக்க கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்களுக்கான ஆதார் அட்டை பெற்றிருக்க வேண்டும்.

2017 - 2018 கல்வியாண்டில் அனைத்து மாணவர்களும் ஆதார் அட்டை பெற்றிருக்க வேண்டும் . அதன்படி ஆதார் அட்டை புகைப்பட அட்டை இல்லாத மாணவர்களுக்கு கல்வித்துறைச் சார்ந்த நபரை நியமிக்கலாம். கல்வித்துறை சார்ந்த நபரை நியமித்து மாணவர்களுக்கு ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுத்து பெற்றோர்களின் அனுமதியுடன் அனைத்து விவரங்களையும் பதிவு செய்து ஆதார் உருவாக்கித்தரப்பட வேண்டும்.

தொடக்க கல்வி அலுவலர் ஆதார் அட்டை எடுக்கும் பணியை முடிக்கும் வேலை யை செய்ய வேண்டும். ஆதார் எண்ணிற்க்கான அனைத்து தகவல்களையும் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். ஆதார் புகைப்படம் எடுத்தவுடன் ஆதார் நம்பர் கிடைத்தப்பின் தொடக்க கல்வி அலுவலர் அதனை முறைப்படி பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

கல்வி மேலாண்மை தகவல் மேலாண்மை முறைமையில் அனைத்து மாணவர்களின் விர்ங்களை முறைப்படி பதிவு செய்து அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஆதார் அட்டை :

மாணவர்களுக்கு ஆதார் அட்டை எடுப்பது அவசியம் என எதனாள பள்ளிகளில் இந்த திணிப்புகள் என்று யோசிக்கையில் நாம் அனைவரும் எதோ ஒரு வழியில் பிணைக்கப்படுகிறோம் என்று தெரிகின்றது.

மாணவர்களுக்கு கட்டாய ஆதார் அட்டை பெற வேண்டிய அவசியம் ஏன் வங்கி, மற்றும் மொபைல் போன்கள், ரேசன் கார்டுகள் என தொடங்கி நாடு முழுவதும் மக்களை துறைவாரியாக பிரித்தெடுக்க என்ன காரணம் என்ற கேள்விகள் அனைத்து தரப்பு மக்களையும் கேட்கச் செய்கின்றது . தேவைகளை நிறைவேற்ற என்ற அரசு என்னதான் காரணம் கூறினாலும் அதன் பின் என்ன அரசியல் நடவடிக்கையுள்ளது என்ற சிந்தனை அதிகரிக்கின்றது .

சார்ந்த பாரதி :

மாணவர்கள் பிரச்சனைகள் அத்துடன் ஆசிரியர்கள் அலட்சியம் என்னவாகும் நமது தேசத்தின் எதிர்காலம்

English summary
here article tell about Adhaar card mandatory for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia