பள்ளி சேர்க்கை, நீட் தேர்வு, 6 முதல் 14 வயதிற்கு உட்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு ஆதாரை கட்டாய மாக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அரசின் சேவைகளைப் பெற ஆதார் கட்டாயம் என கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. இது படிப்படியாக தனியார் நிறுவனங்களிலும் தொடர்ந்தது. இதனிடையே ஆதார் பாதுகாப்பு அற்றது எனவும், மேலும், ஆதாரைக் கொண்டு பொதுமக்களுக்கு பல சலுகைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் பல துறைகளில் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என தற்போது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதில், பள்ளி சேர்க்கை, நீட் தேர்வு உள்ளிட்டவையும் அடங்கும்.
உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், 6 முதல் 14 வயதிற்கு உட்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது, ஆதார் இல்லை எனப் கூறி அடிப்படைக் கல்வி உரிமையினை பறிக்கக் கூடாது, நீட், சிபிஎஸ்இ தேர்வுகளுக்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை என தீர்ப்பளித்துள்ளது.


Click it and Unblock the Notifications












