நெட் தேர்வு எழுதுவோர்கள் ஆதார் எண்ணை கட்டாயமாக அறிவிக்க வேண்டும்

Posted By:

யுஜிசி நெட் தேர்வு எழுதுவோர் ஆதார் இணைக்க வேண்டும் .நவம்பர் மாதத்தில் நடக்கும் தேர்வுக்கு அதார் கட்டாயம் ஆகும் என சிபிஎஸ்சி அறிவித்துள்ளது.

யுஜிசி அறிவிப்பின்படி நெட் தேர்வுக்கு ஆதார் கட்டாயமாகும்

யுஜிசி நெட் தேர்வில் பங்கேற்கும் அனைவரும் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது கட்டாயமாக சுய விவரங்களுடன் ஆதார் எண்ணையும் விண்ணப்பித்தலில் தெரிவிக்க வேண்டும் .

ஆதார் கார்டு தேர்வு அறைக்கு எடுத்து செல்ல வேண்டும் . ஆகஸ்ட் 1 அன்று யுஜிசி நெட் தேர்வுக்கான விண்ணப்பம் தொடங்கும் . இத்தேர்வில் ஏராளமானோர் பங்கேற்கின்றனர். ஆன்லைனில் விண்ணப்பங்களில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்கவும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என சிபிஎஸ்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சிபிஎஸ்சி நடத்தும் நெட் தேர்வானது எழுத முதுகலை பட்டம் அறிவியல் மற்றும் சமுகவியல் ,கணிபொறியியல், எலக்டிரானிக்ஸ் பாடங்களில் பட்டதாரியாக அங்கிகரிக்கப்பட்ட கல்வி கூடங்களில் படித்திருக்க வேண்டும் . அவர்களே யுஜிசி நடத்தும் தேர்வு எழுத தகுதியானவர்கள் ஆவர் . 28 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது பிரிவை பொருத்து வயது ஒதுக்கீடு மாறுப்படும் . வருடத்திற்கு இரு முறை இத்தேர்வு நடைபெறுகிறது .மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தும் தேர்வில் பங்கு கொண்டு நாடு முழுவதும் உள்ள கல்லுரிகளில் உதவி பேராசிரியர் பதவியில் சேருவதற்கான தகுதி பெறவும் , உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவிதொகை பெறவும் இத்தேர்வு நடைபெறுகிறது 

சார்ந்த பதிவுகள் : 

சிஎஸ்ஐஆர் நடத்தும் நெட் தேர்வுக்கான அட்மிட் கார்டு டவுண்லோடு செய்யலாம்

 நெட் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும்... பல்கலை மானியக்குழு அறிவிப்பு....

English summary
above article tell about aadhaar identification is must for ugc net exams
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia