உங்ககிட்ட ஆதார் இல்லையா.. நோ டென்சன்.. உங்களுக்காகவே சிறப்பு முகாம்!

Posted By:

சென்னை : ஆதார் அட்டை பெறாத மாணவர்களுக்கு சிறப்பு முகாம் ஒன்றினை கோடை விடுமுறையில் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

ஆதார் அடையாள அட்டை இல்லாத மாணவ மாணவியர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் சிறப்பு முகாம் ஒன்றினை பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
ஆதார் இல்லாத மாணவர்கள் இந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்தி ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.

ஆதார் அட்டை

தமிழகத்தில் பள்ளி கல்வி இயக்ககத்தின் கீழ் 2016-17ம் கல்வியாண்டில் உயர் மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆதார் எண் வழங்கும் பணியை 100 சதவீதம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்

இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் இதுவரை ஆதார் அட்டை பதிவு செய்யப்படாத மாணவர்களுக்காக 2017 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வட்ட அளவில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

அறிவுரை

இது சார்பாக தாலுகா அளவில் நடைபெறும் சிறப்பு முகாமில் அந்தந்த தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள்,தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இந்த விபரத்தை தெரிவித்து ஆதார் அட்டை பதிவு முகாமை பயன்படுத்திக்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்க வேண்டும்.

100 சதவீத ஆதார்

100 சதவீத ஆதார் பதிவை உறுதி செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அனைத்து மாணவர்களும் இந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்தி ஆதார் பெற்றுக் கொள்ளலாம்.

English summary
The process of getting the aadhaar card is same for every individual. Under this campaign of providing aadhaar card to school students, special camps will be organized for them.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia