தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு உயர்த்தப்பட்ட தர மதிப்பீடு அந்தஸ்து

Posted By:

சென்னை: தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்குத் தேசிய தர அங்கீகாரக் குழு (நாக்) உயர்த்தப்பட்ட தர மதிப்பீடு அந்தஸ்தை வழங்கியுள்ளது.

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளை ஏற்ற தேசிய தர அங்கீகாரக் குழு புதிய தரமாக 3.54 புள்ளிகளை வழங்கியுள்ளது.

இந்தப் பல்கலைக்கழகத்துக்கு 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வந்த தேசிய தர அங்கீகாரக் குழு(நாக்) மூன்றாவது சுற்று தரம் வழங்கலில் 3.3 புள்ளிகள் அடிப்படையில் "ஏ' தகுதியை வழங்கியது. அந்தக் குழு வழங்கிய தரப்புள்ளிகள், தகவல்கள் குறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மேல்முறையீடு செய்தது. அதன்படி, மேல்முறையீட்டுக் குழு நான்கு அடிப்படைகளில் தன்னுடைய மதிப்பீட்டைத் திருத்தி அமைத்தது.

பாடம் தொடர்பான கூறுகள், ஆய்வு உரையாடல்கள், விரிவாக்கம், பயிற்றுவித்தல் கற்றல், புதியன படைத்தல், சிறந்த நடைமுறைகள் போன்றவற்றை அக்குழு கருத்தில் கொண்டது.

மேல்முறையீட்டுக் குழுத் தன்னுடைய மதிப்பீட்டை 3.54 என்பதைத் திருத்தி அமைத்தது. மேலும், நடப்பாண்டில் மே 11ஆம் தேதி நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு இறுதியாக அங்கீகரிக்கப்பட்டது. இந்தப் புதிய மதிப்பீடான 3.54, "ஏ' தரம் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசுப் பல்கலைக்கழகங்கள், அனைத்து தனியார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களையும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் விஞ்சி முன்னிலையில் உள்ளது.

புதிய மதிப்பீடாக 3.54 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளதால் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு மேலும் ஒரு உயரிய அந்தஸ்து கிடைத்துள்ளது. சாஸ்த்ரா பல்கலைக்கழக டீன் எஸ். வைத்தியசுப்பிரமணியம் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

English summary
The National Assessment and Accreditation Council (NAAC) has revised the score given to SASTRA University in its third cycle accreditation after considering an appeal from the varsity. S.Vaidhyasubamaniam, Dean, Planning and Development, SASTRA University, in a press release, said that the varsity was awarded A Grade in the 3rd cycle accreditation by NAAC with a score of 3.3 during March 2014.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia