என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்களின் குறைகளை தீர்க்க ஆன்லைன் வசதி - ஏ.ஐ.சி.டி.இ. அறிவுறுத்தல்

Posted By:

புது டெல்லி : ஐதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் பயின்ற மாணவர் ரோகித் வெமூலா என்பவர் சென்ற வருடம் தற்கொலை செய்து கொண்டார். அதனை விசாரிப்பதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒரு நபர் விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது. அப்படி உருவாக்கப்பட்ட குழுவில் உள்ளோர் மாணவர்களின் புகார் மற்றும் குறைகளை களைவதற்கான வழிமுறைகளை கல்லூரிகளில் உருவாக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்த்ல் உருவாக்கப்பட்ட ஒரு நபர் விசாரணைக் குழு பரிந்துரையின் படி என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் குறைகளைக் களைவதற்கான வழிமுறை ஒன்றை ஏற்படுத்த அனைத்து இந்திய தொழில் நுட்பக்கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) முடிவு செய்துள்ளது.

என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்களின் குறைகளை தீர்க்க ஆன்லைன் வசதி - ஏ.ஐ.சி.டி.இ. அறிவுறுத்தல்

மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் குறைகளைக் களைவதற்கான வசதி வாய்ப்பு ஆன்லைன் மூலம் செய்து தரப்படும் என ஏ.ஐ.சி.டி.இ. கூறியுள்ளது. மேலும் ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளுக்கும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் குறைகளை தீர்ப்பதற்கு ஆன்லைனில் வசதி செய்து தருவதுப் பற்றி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகள் ஏ.ஐ.சி.டி.இ அங்கீகாரம் பெற்று விளங்குகின்றன.

ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடைய குறைகள் மற்றும் புகார்களை பதிவு செய்யவும். அதற்கான தீர்வுகளை காண்பதற்குமான ஏற்பாடுகளை ஆன்லைனில் உடனே செய்து தர வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இந்ததக் கடிதம் கல்லூரி தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்துபவருக்கே நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது.

ஏ.ஐ.சி.டி.இ. மாணவர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்வதற்குத் தேவையான ஆன் லைன் முகவரி மற்றும் குறைதீர்ப்பு குழு உறுப்பினர்க்ளுடைய தொலை பேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகிய அனைத்து தகவல்களையும் கல்லூரி நிர்வாகத்தின் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்றுக் கூறி உள்ளது.

மேலும் ஏ.ஐ.சி.டி.இ மாணவர்களால் கொடுக்கப்படும் புகார்கள், அதன்மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் நிலுவையில் உள்ள புகார்கள் என அனைத்து தகவல்களும் அடங்கிய அறிக்கை ஒன்றை மாதந் தோறும் அனைத்துக் கல்லூரிகளும் தவறாமல் அனுப்ப வேண்டும் எனக் கூறியுள்ளது.

ஏ.ஐ.சி.டி.இ ஆல் வலியுறுத்தப்படும் இந்த மாணவர்கள் குறை தீர்க்கும் ஆன்லைன் மையம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அவர்களின் கருத்துக்களை பதிவு செய்வதற்கு உகந்ததாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.

English summary
A.I.C.T.E suggests - to resolve the grievances of the students online access
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia