கரும்பலகையில் எழுதுவதால் எளிதாக மாணவர்கள் பயிலலாம்: ஆய்வில் தகவல்...!!

Posted By:

டெல்லி: கரும்பலகையில் எழுதுவதால் மாணவர்கள் எளிதில் பயில முடியும் என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான ஆய்வை செராமிக்ஸ்டீல் நிறுவனம் நடத்தியது. இந்த ஆய்வில் 97 சதவீதம் ஆசிரியர்கள், கரும்பலகையில் எழுதிக் கற்பதன் மூலம் மாணவர்கள் எளிதாகப் பாடங்களை புரிந்துகொள்ள முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

கரும்பலகையில் எழுதுவதால் எளிதாக மாணவர்கள் பயிலலாம்: ஆய்வில் தகவல்...!!

செராமிக் ஸ்டீல், பாலிவிஷன், டீச் ஃபார் இந்தியா, ஒயிட்மார்க் நிறுவனம் ஆகியவை இணைந்து நூற்றுக்கணக்கான ஒயிட்போர்டுகள், பிளாக்போர்டுகளை பள்ளிகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளது. மும்பை, டெல்லி, புனே, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, சென்னை, ஆமதாபாத் ஆகிய நகரங்களிலுள்ள பள்ளிகளுக்கு இந்த கரும்பலகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முழுவதும் பள்ளிகளுக்கு இதுபோன்ற நன்கொடைகள் வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் கல்வியை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் பாலிவிஷன் நிறுவனம் எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வும் நடத்தப்பட்டது. அப்போதுதான் கரும்பலகைகளில் எழுதிக் கற்பதன்மூலம் மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியும் என தாங்கள் நம்புவதாக 97 சதவீத ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

English summary
The leading CeramicSteel manufacturer conducted a pan India survey along with partners Whitemark and Teach for India to measure the increase in learning depending on the quality of writing boards used Mumbai: In a bid to reduce the education inequity in India, one of world's leading CeramicSteel manufacturers, PolyVision, launched an initiative in India to provide a vital premium teaching tool to classrooms which needed it the most. In partnership with Teach for India, and Whitemark Limited, the company's national distributor in India, PolyVision donated hundreds of high quality e3TM CeramicSteel whiteboards and chalkboards to underdeveloped classrooms across seven cities; Mumbai, Delhi, Pune, Bangalore, Hyderabad, Chennai and Ahmedabad and will continue their donation efforts with Teach for India throughout the year.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia