பட்டதாரி ஆசிரியர் கவுன்சிலிங்: காலியாக கிடக்கும் 927 பணியிடங்கள்

Posted By:

சென்னை: பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் இடங்களுக்கு டிரான்ஸ்பர் பெறுவதற்கான கவுன்சிலிங் விரைவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 927 இடங்கள் தற்போது காலியாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு அக்டோபர் 26-ல் மாவட்டத்துக்குள்ளேயும், அக்டோபர் 27-ல் மாவட்டம் விட்டு மாவட்டமும் டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கும் நடத்தப்பட உள்ளது.

பட்டதாரி ஆசிரியர் கவுன்சிலிங்: காலியாக கிடக்கும் 927 பணியிடங்கள்

கவுன்சிலிங்குக்குப் பிறகு காலிப் பணியிட விவரங்கள் பெறப்படும். இதைத் தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு செய்வதற்கான இணைய வழியில் கவுன்சிலிங் அக்டோபர் 30-ல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், டிரான்ஸ்பர் கவுன்சிலிங்குக்காக 927 காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலேயே அதிகஅளவில் உள்ளதாகவும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

டிரான்ஸ்பர் கவுன்சிலிங் நடைபெறுவதையொட்டி டிரான்ஸ்பர் பெற விரும்பும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

English summary
927 Graduate Teachers posts has to be filled by the School Education Department through Transfer Counselling. More than 900 seats are vacant now, officials said.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia