நாடு முழுவதும் காலியாக உள்ள 905 ஐபிஎஸ் அதிகாரி பணியிடங்கள்!

Posted By:

சென்னை: இந்தியாவில் 906 ஐபிஎஸ் அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது. ஐபிஎஸ் பணியிடங்கள் காலியாக உள்ளதில் உத்தரபிரதேச மாநிலம் முன்னிலை வகிக்கிறது.

சிவில் படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளில் முதல் 5 இடங்களில் 4 பெண்கள் தேர்வாயினர். முதலிடத்தை டெல்லியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஐரா சிங்கால் பெற்றார்.

நாடு முழுவதும் காலியாக உள்ள 905 ஐபிஎஸ் அதிகாரி பணியிடங்கள்!

இந்த நிலையில் நாடு முழுவதும் மொத்தம் 906 ஐபிஎஸ் அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் 4,754 காவலர் பணியிடங்களில் 3,843 இடங்கள் இதுவரை நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள காலி பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படாமல் உள்ளன.

அதிலும் உத்தரபிரதேச மாநிலத்தில் போலீஸ் அதிகாரிகள் பணிக்கு அதிகப்படியான பற்றாக்குறை நிலவி வருகிறது.

இதுகுறித்து, ஐபிஎஸ் அதிகாரி சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த தகவல் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். போலீஸ் அதிகாரி பணிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு இந்தாண்டு பற்றாக்குறை நிலவியுள்ளது. மே 17ம் தேதி உள்துறை அமைச்சகத்துக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றார் சர்மா. தற்போது சிவில் சர்வீஸஸ் தேர்வுகள் முடிவுகள் வெளியாகியுள்ளதால் அதிலிருந்து தேர்வு செய்யப்படுபவர்கள் ஐபிஎஸ் அதிகாரிகள் இப்பணிகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
UPSC has to fill 905 police officers vacancies in India shortly, IPS officer sharma said to reporters.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia