அமெரிக்காவிற்கு படையெடுக்கும் மாணவர்கள் – குறைகிறதா இந்தியக் கல்வித்தரம்?

டெல்லி: இந்தியாவில் அமெரிக்கா செல்வதற்காக விசா கேட்டு இந்த ஆண்டு மட்டும் 90,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 4000 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 60 சதவீதம் அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படிப்பிற்காகவும், வேலைவாய்ப்பு தேடியும் வெளிநாடு செல்லும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் வெகுவாக அதிகரித்துள்ளது.

இது இந்தியாவில் கல்வி தரம் சரிந்து வருவதையே காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் எதிர்காலம்:

இந்தியாவின் எதிர்காலம்:

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் கையில் உள்ளது என மகாத்மா காந்தி, விவேகானந்தர் தொடங்கி அப்துல் கலாம், மோடி வரை அனைத்து தலைவர்களும் கூறி வருகின்றனர்.

அதிகரிக்கும் எண்ணிக்கை:

அதிகரிக்கும் எண்ணிக்கை:

ஆனால் மேல்படிப்பிற்காகவும், வேலைக்காகவும் வெளிநாடு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

கல்வித்தரம் குறைவு:

கல்வித்தரம் குறைவு:

இதற்கு காரணம் இந்தியாவில் கல்வி தரம் குறைந்துள்ளதும், வேலைவாய்ப்புக்கள் போதிய அளவு இல்லாததுமே காரணம் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டி உள்ளனர்.

குவியும் விசாக்கள்:

குவியும் விசாக்கள்:

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திலும், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை போன்ற பெருநகரங்களிலும் உள்ள துணை தூதரங்களிலும் கடந்த ஓராண்டில் மட்டும் அமெரிக்க விசா கேட்டு ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

இந்திய மாணவர்கள் அதிகம்:

இந்திய மாணவர்கள் அதிகம்:

சீனாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் அதிகம் படிக்கும் மாணவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

78 சதவீதம் பேர் விண்ணப்பம்:

78 சதவீதம் பேர் விண்ணப்பம்:

அமெரிக்காவில் மேல்படிப்பிற்கு செல்ல விண்ணப்பித்திருக்கும் மாணவர்களில் 78 சதவீதம் பேர் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கணிதம் துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் கல்வியும்:

பொறியியல் கல்வியும்:

கம்யூட்டர் சயின்சிற்கு அடுத்தபடியாக பொறியியல் படிப்பதற்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையே அதிகளவில் உள்ளதாக தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3.3 பில்லியம் டாலர்கள் வருமானம்:

3.3 பில்லியம் டாலர்கள் வருமானம்:

அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களால் கடந்த ஆண்டு அமெரிக்க பொருளாதாரத்திற்கு 3.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The number of student visa applications for the United States has registered a 60 per cent increase this year with a whopping 90,000 applicants, of whom only about 4,000 could make the cut.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X