தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

Posted By:

சென்னை : தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

எட்டாம் வகுப்பு தனித் தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு 2017 ஜனவரி மாதம் 4ம் தேதி முதல் ஜனவரி 9ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றன.

தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் பகல் 12 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் மேற்கண்ட இணையதள முகவரிக்குச் சென்று தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து சமர்ப்பித்தால் அவர்களுக்கான தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம்.

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை அரசு தேர்வுகள் இயக்குனர் தண். வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

English summary
Director of Government Examinations Tan. Vasundhara Devi has announced that 8th std result declared today for private candidates.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia