இந்திய வான்படையின் 85வது ஆண்டு தின நாள் இன்று !!

Posted By:

இந்திய வான்படையின் 85 வது விமானப்படைதினம் இன்று .
இந்திய வான்படையானது 1932 ஆம் ஆண்டு ஆங்கில ஆட்சி காலத்தில் இந்திய ராயல் ஏர் ஃபோர்ஸ் என்னும் பெயரில் உருவாக்கப்பட்டது.

இந்திய வான்படைத் தினநாளை பெருமிதத்துடன் கொண்டாடுவோம்

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பின் இந்திய விமானப்படை இந்தியாவின் சொந்த நிர்வாகத்திறனில் கொண்டு வரப்பட்டது . 1950 முதல் இந்தியன் ராயல் ஏர் இந்தியா ஃபோர்ஸ் என்ற பெயர் மாற்றம் பெற்று இந்தியன் ஏர் ஃபோர்ஸ் என்றானது .

இந்தியாவின் வான்வழி எல்லைக்குட்ப்பட்ட பகுதியை பாதுகாத்தல் மற்றும் போர் வரும்போது எதிரிகளிடமிருந்து நாட்டைக்காத்தல் மற்றும் ஐநாவின் அமைதியை நிலைநாட்டும் படையாக இருப்பது இதன் வேலையாகும் . மேலும் அமைதி காத்தல் பிரிவு, காங்கோ ,சோமாலையா போன்ற நாடுகளை காக்கும் பணியை செய்து வந்துள்ளது .

இந்தியாவின் பாதுகாப்பு படைகளான இந்திய ஆர்மி, நேவல், ஏர் ஃபோர்ஸ் இவைகள் அனைத்துக்கும் தனித்தனி பெருமைகள் உள்ளன .
இந்தியன் இராணுவத்தில் பணியாற்றுவது மிகபெருமை வாய்ந்த ஒன்றாகும் .

இந்திய விமானப்படையின் மந்திர சொல்லான "டச் த ஸ்கை வித் குளோரி "என்ற குறிக்கோள் கொண்டது . பெருமையுடன் வானைத் தொடுதல் என்ற வாசகம் கொண்டு விண்ணில் பறக்கின்றது .

இந்திய வான்ப்படையின் சாதனையாக குழுவாக இணைந்து மலையேற்றுதல் வெற்றிகரமாக செய்துள்ளது . அத்துடன் இந்திய விமானப்படை சாகசங்கள் நிகழத்தி மக்களை பெருமிதப்படுத்துகிறது அத்துடன் மிக வலிமையான அதிக பலம் படைத்த ஒரு படையாக திறன் மிகு அமைப்பாக நாட்டை பெருமிதப்படுத்துகிறது . மேலும் அதி நவீன விமான இயக்கம் எந்த சூழலிலும் செயல்படும் வேகம் அனைத்தும் இந்தியன் ஏர் ஃபோர்ஸின் சாதனையாகளுள் ஒன்றாகும் .

உலகத்தின் மிகச்சிறிய விமானத்தில் சுற்றி 2007 பெருமிதப்படுத்தியது .
கிளிமஞ்சாரோ மலையேற்றம் , பெண்கள் பிரிவு எவரெஸ்ட் மலையேற்றம் போன்ற 7  பிரிவு  சப்மிட்களில் சாதித்துள்ளது .

இந்திய வான்படையில் இணைய இளைஞர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் . இந்திய வான்படை தளம் கேரளாவில் உள்ளது . என்டிஏ எனப்படும் நேஷனல் டிபென்ஸ் தேர்வு எனப்படும் என்டிஏ தேர்வு எழுதினால் தரைப்படையிலும் வான்ப்படையில் இணைய யூபிஎஸ்சியால் நடத்தப்படும் தேர்வு எழுத வேண்டும் .என்டிஏ தேர்வு குறித்து ஏற்கனவே அறிவித்துள்ளோம் அதன் இணைப்பையுக் கொடுத்துள்ளோம் .

ஒரு மாணவை எவ்வாறு தேர்ந்த வான்ப்படை இளைஞானாக மாற்றுவது குறித்து என்டிஏ தேர்வு எழுத வேண்டுமோ அதே போல் இளைஞர்கள் 19 வயது முதல் 26 வயது இளைஞர்கள் மத்திய ஆட்சிப்பணி ஆணையத்தால் நடத்தப்படும் தேர்வை எழுதினால் வான்ப்படையிலும் இணையலாம் . அத்துடன் வான்ப்படையால் நடத்தப்படும் ஆஃபிஸர் தேர்வுக்கு எழுதினால் பிளையிங் ஆஃபிஸர் ரேங்கிங் பெறலாம் . இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த படையின் தினத்தை நாம் என்றும் கொண்டாடுவோம் . அப்துல்கலாம் , அர்ஜான் சிங் நேவல் மார்ஷல் போன்றோர் இந்திய வான்ப்படைக்கு சாதனை சேர்த்த பெருமைக்குரியவர்களாவார்கள் மாணவர்களே நீங்களும் அச்சாதனை புரிய வேண்டும் தேசிய வான்படைக்கு பெருமிதம் சேர்க்க வேண்டும்

சார்ந்த பிரிவுகள்:

மாணவர்களுக்கான பாதுகாப்புத்துறையில் உள்ள வாய்ப்பு !  

English summary
here article tell about 85th Air force day celebration

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia