தமிழக அரசின் மருத்துவ படிப்புகளுக்கான 85% சதவிகித இடஒதுக்கீடு இரத்து

Posted By:

தமிழ்நாட்டில் மருத்துவ படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வையடுத்து வழங்கப்பட்ட 85% சதவீகித இடஒதுக்கீடு உயர்நீதிமன்றம் இரத்து செய்தது.

தமிழக அரசின் 85% சதவிகித இடஒதுக்கீடு  இரத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வெழுதிய தமிழக பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85% சதவீகிதம் இடஒதுக்கீடு அளித்து மாநில அரசு முடிவெடுத்தது. மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை எதிர்த்து தஞ்சை மாணவன் வழக்கு தொடுத்தார் .
அவருடன் சிபிஎஸ்சி மாணவர்களும் வழக்கு தொடுத்தனர். இதனையடுத்து நடைபெற்ற வழக்கில் இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி மட்டும்தான மருத்துவ கவுன்சில் நடைபெற வேண்டும் . இந்திய மருத்துவ கவுன்சில் விதியை மீறி மாநில பாடத்திட்டம் மற்றும் மத்திய பாடத்திட்டம் என பிரித்து இடஓதுக்கீடு வழங்க கூடாது . இது இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிரானது என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது .

தமிழக அரசின் 85% சதவிகித இடஒதுக்கீடு  இரத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

இருதரப்பு நியாயங்களை விசாரித்து உயர்நீதிமன்றத்தின் நீதிபதி இரவிசந்திரபாபு வெளியிட்ட உத்தரவானது நீட் தேர்வின் மதிபெண்கள் வைத்து கிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்கிடு அரசு வழங்கியது எதிராக நீதிமன்றம் செயல்படாது.  இருப்பினும் மதிபெண்கள் சமநிலையற்ற போக்கு மற்றும் மாணவர்களுக்கான மதிபெண் ஒதுக்கிடானது, இந்திய அரசியல் சாசனப்படி சரத்து 14 ல் கீழ் சம உரிமை மீறும் போக்காகவே உள்ளது . இது சரியனறு ஆகவே ஜூன் 22 அன்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை இரத்து செய்யப்படுகிறது . என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது .

இதனை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவம் பிடிஎஸ் மாணவர்கள் சேர்க்கைகான கவுன்சிலிங் தள்ளி போகின்றது . 50ஆயிரம் மாணவர்கள் மருத்துவம் பிடிஎஸ் படிப்புகளுக்கு மேல்    விண்ணப்பித்துள்ளனர். இன்று நடக்கப்படவேண்டிய கலந்தாய்வு நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது . மீண்டும் மேல்முறையீட்டில் தீர்ப்பை அடுத்து மருத்துவ கவுன்சில் தொடங்கப்படும் .

சார்ந்த படிப்புகள் :

நீட் தேர்வுவை தொடர்ந்து அரசு மாணவர்களுக்கு மருத்துவ ஒதுக்கீடு தொடர்பாக வழக்கு

மருத்துவம் , வேளாண்மை, பொறியியல் கவுன்சிலிங்கள் நீட் தேர்வுக்குப்பின் ஸ்தம்பிப்பு

மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நேரில் பெற்று கொள்ளலாம் 

English summary
above article mentioned medical allowance of tamilnadu government cancelled by chennai high court

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia