இலவச கட்டாயக் கல்விக்கு 79,000 விண்ணப்பங்கள்... ஜூன் 5ல் சேர்க்கை..!

தனியார் சுயநிதி பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்விக்கு நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்க்கை. 79 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

சென்னை : இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்க்கைக்காக இதுவரை 79 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இச்சேர்க்கைக்கு இணைய வழியாக மொத்தம் 79,842 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளிக்கும் விண்ணப்பித்துள்ள குழந்தைகளின் பட்டியல் இன்று பதிவிறக்கம் செய்யப்படுகிறது.

குழந்தைகளின் பெயர் பட்டியல்

குழந்தைகளின் பெயர் பட்டியல்

நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்கோ, அதைவிட குறைவாகவோ விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் தகுதியான அனைத்து குழந்தைகளுக்கும் சேர்க்கை வழங்கும் பொருட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சார்ந்த பள்ளிகளுக்கு குழந்தைகளின் பெயர்ப்பட்டியல் நாளை வழங்கப்படும்.

குலுக்கல் நடைபெறும்

குலுக்கல் நடைபெறும்

கூடுதலாக விணப்பங்கள் பெறப்பட்டிருக்கும் பள்ளிகளில், நாளை குலுக்கல் முறையில் சேர்க்கைக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர். கல்வித்துறை பிரதிநிதி ஒரு வரும் பள்ள்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். விண்ணப்பித்துள்ள குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பள்ளி முதல்வர் முன்னிலையில் குலுக்கல் நடை பெறும்

தகுதியானவர்களுக்கு நோ குலுக்கல்
 

தகுதியானவர்களுக்கு நோ குலுக்கல்

முதலாவதாக வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர்களான ஆதரவற்றவர்கள். எச்.ஜ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மூனறாம் பாலினத்தவர் துப்புரவு தொழிலாளியின் குழந்தைகள், மாற்றுத் திறனாளியாக உள்ள குழந்தைகள் போன்றோரிடம் இருந்து பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் குலுக்கலின்றி சேர்க்கைக்கு தேர்வு செய்யப்படும். அதன் பின்னர், மீதமுள்ள இடங்களுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள் இருப்பிடத்தில் வசிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை கொண்டு குலுக்கல் நடத்தப்படும். அதன் பின்னரும் காலி இடங்கள் இருப்பின் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கும் அதிகமான இருப்பிடத்தில் வசிக்கும் குழந்தைகளின் விண்ணப்பங்களை கொண்டு குலுக்கல் நடத்தப்படும்.

ஜூன் 5 சேர்க்கை பட்டியல்

ஜூன் 5 சேர்க்கை பட்டியல்

ஒவ்வொரு பள்ளிக்கும் நுழைவுநிலை வகுப்பின் ஒவ்வொரு பிரிவிற்கும் 5 இடங்கள் வீதம் காத்திருப்பு பட்டியல் குலுக்கல் முறையில் தயார் செய்யப்படும். குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் பள்ளியில் சேரவில்லையெனில் காத்திருப்பு பட்டியலில் இருந்து சேர்க்கை வழங்கப்படும். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் பட்டியல், காத்திருப்பு பட்டியலில் வருவாய் மற்றும் கல்வித்துறை சார்ந்த பிரதிநிதிகள் பள்ளியின் முதல்வர் மற்றும் குலுக்கலில் கலந்து கொண்ட பெற்றோர் கையொப்பமிட்டு நாளையே பள்ளி தகவல் பலகையில் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு ஜூன் 5ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்கை வழங்கப்படும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Government of Tamil Nadu has stated that 79 thousand applications have been received so far in the private sector schools under the Free and rte act.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X