75 சதவீத சிறந்த சிபிஎஸ்இ பள்ளிகள் தென்னிந்தியாவில்தான் உள்ளன: ஆய்வில் தகவல்

Posted By:

சென்னை: நாட்டிலுள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 75 சதவீத சிறந்த பள்ளிகள் தென்னிந்தியாவில்தான் உள்ளன என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில் 7 பள்ளிகள் தமிழகத்தில் உள்ளன.

நாட்டிலுள்ள சிறப்பான சிபிஎஸ்இ பள்ளிகள் எவை என்ற கணக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள், பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், சிறந்த மாணவர் பட்டியல் என பல துறைகளில் ஆய்வு நடத்திய பின்னர் 75 சதவீத சிறந்த பள்ளிகள் தென்னிந்தியாவில்தான் செயல்பட்டு வருகின்றன என்று தெரியவந்துள்ளது.

75 சதவீத சிறந்த சிபிஎஸ்இ பள்ளிகள் தென்னிந்தியாவில்தான் உள்ளன: ஆய்வில் தகவல்

குறிப்பாக இதில் 7 பள்ளிகள் தமிழகத்தில் உள்ளன என்பது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய விஷயமாக உள்ளது.
முதல் 20 இடங்களுக்குள் வரக்கூடிய பள்ளிகளில் தமிழகத்தில் 7 பள்ளிகள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக பெங்களூரு நகரில் 5 பள்ளிகள் உள்ளன.

இந்த பட்டியலில் தனியார் பள்ளிகள் மட்டுமல்லாமல் அரசு நடத்தும் 2 பள்ளிகளும் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் ஜவஹர் நவோதா வித்யாலயா பள்ளிகள் 2 இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த 7 பள்ளிகள் முதல் 20 இடங்களுக்குள் வந்துள்ளதால் அந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னை முகப்பேரில் உள்ள டிஏவி ஆண்கள் பள்ளி, லாயிட்ஸ் ரோடு பெண்கள் டிஏவி பள்ளி, லாயிட்ஸ் ரோடு ஆண்கள் டிஏவி பள்ளி, கோவையிலுள்ள சின்மயா இன்டரநேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளி, சென்னை இந்திரா நகர் ஹிந்து சீனியர் செகண்டரி பள்ளி, சென்னை முகப்பேர் டிஏவி பெண்கள் பள்ளி, சென்னை மைலாப்பூர் வித்யா மந்திர் பள்ளி ஆகியவை பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழக பள்ளிகளாகும்.

English summary
Tamil Nadu tops the list of states with 7 of its schools among the India's best 20, this is by the best overall aggregates in Class XII CBSE exams in 2015. Among the top 20, Bengaluru houses 5 schools. it's not just the private schools in the top list, but 2 central government-run Jawahar Navodaya Vidyalayas also feature in this year's list of top 20. The overall aggregate for a school was arrived at by taking out the average marks obtained by all the students who took the class XII CBSE exams.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia