3-வது கட்ட கவுன்சிலிங் விறுவிறு!! 73 மாணவர்களூக்கு சீட்!!!

Posted By:

சென்னை: தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் விரிவுபடுத்தப்பட்ட 3-வது கவுன்சிலிங்கில் மாநிலத்தைச் சேர்ந்த 73 மாணவ, மாணவிகள் எம்பிபிஎஸ் படிப்புகளி்ல் சேர்ந்தனர்.

முதல் 2 கட்டமாக கவுன்சிலிங்

தமிழகத்தில் ஜூலையில் முதல் 2 கட்டங்களாக எம்பிபிஎஸ் சேர்க்கை நடத்தப்பட்டது. மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் இந்த கவுன்சிலிங்கை வெற்றிகரமாக நடத்தினர். இதைத் தொடர்ந்து கடந்த மாதம் காலியாக இருந்த இடங்களுக்காக 3-வது கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட்டது.

இதையடுத்து 3-வது கட்ட விரிவுபடுத்தப்பட்ட கவுன்சிலிங் நேற்று தொடங்கியது.

 

1,140 மாணவர்கள் பங்கேற்பு

இந்த எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மூன்றாவது விரிவுபடுத்தப்பட்ட இரண்டு நாள் கவுன்சிலிங் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது. கவுன்சிலிங்கில் மொத்தம் 1,140 மாணவர்கள் பங்கேற்றனர்.

59 எம்பிபிஎஸ் இடம்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 59 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 15 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை தாகூர்-மதுரை வேலம்மாள்-கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீமூகாம்பிகை ஆகியவற்றில் 8 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 10 பி.டி.எஸ். காலியிடங்கள் ஆகியவற்றை நிரப்ப இந்த கவுன்சிலிங் நடைபெற்றது

73 இடங்கள் நிரம்பின

கவுன்சிலிங்கின் இறுதியில் 48 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 12 எம்.பி.பி.எஸ். இடங்கள், 5 சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், 8 அரசு பி.டி.எஸ்.இடங்கள் என மொத்தம் 73 இடங்கள் நிரப்பப்பட்டன.

75 பிடிஎஸ் இடங்கள்

சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 75 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்களுக்கு நேற்று கவுன்சிலிங் நடத்தப்படவில்லை.

இன்று தொடர்கிறது

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் இன்றும் கவுன்சிலிங் தொடர்கிறது.

2500 பேருக்கு அழைப்பு

இதில் பங்கேற்க 2,500 மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

94 இடங்கள் காலி

அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 11 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 3 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 2 பி.டி.எஸ். காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 75 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்கள் என மொத்தம் 94 இடங்கள் காலியாகவுள்ளன.

இன்று கவுன்சிலிங்

இந்தக் காலி இடங்களை நிரப்ப இன்று கவுன்சிலிங் நடைபெறவுள்ளது.

English summary
73 students has got MBBS admission in 3rd phase extended counselling which has been conducting by Medical Education selection committee.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia