72 வருடங்களை தாங்கி நிற்கும் சுபாஷ் சந்திரபோஸ் சகாப்தம்

Posted By:

ஆகஸ்ட் 18 ஆம் நாள் சுபாஷ் சந்திரபோஸின் நினைவுதினம் .

சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசத்தின் விடிவெள்ளி
நாட்டு நன்மைக்காக தன்னையே அர்ப்பணித்த தேச போராளி !
சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசத்தின் முதல் இராணுவப் படையை அமைத்தவர்.

செல்வந்தர் குடும்பத்தில் செழிப்போடு ஜனவரி 23 ஆம் நாள் 1897 ஆம் ஆண்டு பிறந்தார் . அதாவது சிப்பாய் கழகம் 1857இல் நடந்தது அடுத்து 30 வருடங்களுக்கு பின் சுபாஷ்    ஜானகிநாத் மற்றும் பிரபாவதி தாயார்க்கு மகனாக பிறந்தவர் போஸ். சிறுவயது முதல் படிப்பில் முதன்மையானவராக இருந்தார் போஸ் மற்றும் ஸ்காட்டிஸ் கல்லுரியில் பட்டம் பெற்றார் . பிரிட்டிஸ் ஆட்சி காலத்தில் 1920 இல் சிவில் சர்வீஸ் போட்டி தேர்வில் வெற்றி பெற்று நான்காம் இடம் பெற்றார் .

இரத்ததை கொடு சுதந்திரம் தருகிறேன்  என்று முழக்கமிட்டவர் போஸ்

ஜாலியன் வாலாபாக் :

இந்தியாவில் ஜாலியன் வாலாபாக் படுகொலை 1920 இல் நடைபெற்றது அப்போது நடந்த அநியாயத்தை எதிர்த்து நாடுமுழுவதும் கொந்தளிப்பான போராட்டம் நடக்கையில் சுபாஷ் தனது பதவியை இராஜினாமா செய்து இந்திய விடுதலை இயக்கத்தில் பங்குகொண்டார். மாகாத்மா காந்தியின் கொள்கையில் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கேற்றார்.

இந்திய தேசிய காங்கிரஸ் :

இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் தேசபந்து சித்தரஞ்சன் தலைமையில் சிறப்பாக இந்திய விடுதலை இயக்கத்தில் பணியாற்றினார் . தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை குருவாக ஏற்றுக்கொண்டு மேற்கு வங்கத்தில் செயல்பட்டார் .

இந்தியாவின் பூரண சுதந்திரம் ஒன்றே குறிக்கோள் என்றும் இந்தியாவின் டொமினியன் அந்தஸ்து கொள்கை தேவையில்லை என்றும் காங்கிரஸ் தலைவரகளுக்கு அறிவுறுத்தினார் . 1930 சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்துகொண்டு சிறைசென்றார்,  பகத்சிங் நண்பர் 52 நாள் உண்ணா நோன்பு இருந்த ஜதின்தாஸ் சடலத்தை மேற்கு வங்கம் முழுவதும் எடுத்துசென்று பிரிட்டிஸ் அரசை கதிகலங்க செய்தார் . 1937 ஆம் ஆண்டு அந்நாளில் இருந்த இக்கட்டனா சூழலில் போஸ் அவர்கள் ஹரிபுரா செஸனில் காங்கிரஸ் தலைவராக பதவியேற்றார்.

இரத்ததை கொடு சுதந்திரம் தருகிறேன்  என்று முழக்கமிட்டவர் போஸ்

ஆசாத் ஹிந்த் , இந்திய தேசிய இராணுவம்:

1940 களில் இந்தியாவை விட்டு வெளியேறிய போஸ் அவர்கள் ஆஃப்கானிஸ்தான் வழியாக இரஷ்யா சென்றார் , ஜப்பானில் இந்திய தேசிய இராணுவம் மற்றும் ஆசாத் பௌஃஜ்   உருவாக்கும் பணியில் தன்னை இணைத்தார் . ஜெர்மனியில் ஹிட்லரை சந்தித்து வியக்க வைத்தார் .
சிங்கபூரில் 1943 ஆம் ஆண்டு ஐஎன்ஏ உருவாக்கப்பட்டது . இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கினார் . ஐஎன்ஏவின் கேப்டனாக மோகன் சிங் நியமிக்கப்பட்டார் . பெண்கள் பிரிவிற்கு  தமிழகத்தை சேர்ந்த கேப்டன் லட்சுமி ஷேகல் என்பவரை தலைவராக நியமித்தார் . ஐஎன்ஏ இந்தியாவை நோக்கி கிளம்பி 1944 மார்ச் 18 ஆம் நாளில் பர்மாவை கடந்தது . எதிர்பாராமல் ஏற்ப்பட்ட சில இயற்கை சூழலால் இந்திய தேசியப்படையில் 40 ஆயிரம் போர் வீர்ர்களை கொண்ட படை தோற்றது எனினும் பிரிட்டிஸ் படைகளுக்கு பெரும் அழிவை கொடுத்ததில் ஐஎன்ஏவுக்கு மிகுந்த பங்கு உண்டு .

போஸ் இறுதிநாள் :

இந்தியாவிற்காக தன்னையே அர்ப்பணித்த போஸ் அவர்கள் எமிலி என்ற பெண்ணை திருமணம் செய்ததாக அறிவித்தார் . இந்தியாவின் விடுதலைக்காக வானொலி மூலம் சிறந்த கருத்துக்களை பரபபினார். நாட்டின் மக்களுக்காக சிறப்புரையாற்றினார் .

இந்திய இளைஞர்கள் மாணவர்கள் கற்க வேண்டி பாடம் :

இந்திய மாணவர்களுக்கு ஒரு பெரிய பாடமாக இருப்பதுடன். நேர்மறை சிந்தனை கொண்டவர்களாக இருக்க சுபாஷ் வாழ்கை ஒரு பாடமாக இருக்கும் . போராட்ட குணம் கொண்டு நம்மை சுதந்திர காலத்தில் வழிநடத்திசென்றார் . ஆகஸ்ட் 18 ஆம் நாளான இன்றோடு சுபாஷ் தைபேயில் சைகோன் விமானதளத்தில் இருந்து கிளம்பிய மிட்ஷ்பக்ஸி கே21 என்ற விமானத்தில் செல்லும் போது இறந்ததாக கூறப்படுகிறது . ஜப்பானின் ரெங்கோஜி கோவிலில் அவருடைய அஸ்தி இருப்பதாக சொல்லப்படுகிறது .

1956 ஷா நவாஷ் கமிட்டி முதல் முறையாக அமைக்கப்பட்டது . 1970 கோஷ்லா கமிட்டி 2006 ஜஸ்டிஸ் முகர்ஜி கமிட்டி அமைக்கப்பட்டது . 2016 ஜப்பான போஸ் அவர்களின் ஆவணங்களை சமர்பித்தது .
ஆகஸ்ட் 18 2017 ஆம் ஆண்டுடன் சுபாஷ் இறந்து 72 ஆண்டுகள் கடந்துவிட்டோம். அவருடைய இறப்பு இந்திய மாணவ சமுதாயத்திறகு கற்று தரும் பாடமாவது நிலைத்து நின்று போராட கற்றுகொடுத்துள்ளது .

நேதாஜி என்று அன்புடன் அழைக்கப்படும்  சுபாஷ் சந்திரபோஸ் தியாகம் இந்திய மாணவர்களுக்கு போராட்ட குணத்தையும் தன்னலமற்ற போக்கையும் கற்றுத்தருகிறது . சுபாஷ் என்ற சகாப்தம் இனி எத்தனை நூற்றாண்டுகள் எடுத்தாலும் எடுத்துக்காட்டாக இருந்து இந்தியர்களின் வாழ்வை வழிநடத்தும்,

" இரத்ததை கொடு சுதந்திரம் கொடுக்கிறேன், ஜெய்ஹிந்த் , டெல்லி சலோ" முழக்கங்கள் இந்தியாவை எப்போழுதும் தாங்கி நிற்க செய்யும் .

சார்ந்த பதிவுகள் :

செய் அல்லது செத்துமடி, ஜெய்ஹிந்த் இரண்டும் 75 வருடங்களை கடந்து நிற்கிறது

சுதந்திரதின கொண்டாட்டமுறைகள் நாட்டுமக்களின் ஆர்வம் !!!

இந்திய சுதந்திரதினம் ஒரு பார்வை 

English summary
here article tell about impact of subhash chandra bose

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia