கற்பித்தலில் புதுமை: 65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு காத்திருக்கும் பயிற்சி

Posted By:

சென்னை: கற்பித்தலில் புதுமையைப் புகுத்தும் வண்ணம் ஆசிரியர்களுக்கு புதுவிதமான பயிற்சியை மத்திய அரசு அளிக்கவுள்ளது.

மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் இந்த புதுமையை பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இந்த கற்பித்தலில் புதுமையான பயிற்சி அளிக்கப்பட உள்ளது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கற்பித்தலில் புதுமை: 65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு காத்திருக்கும் பயிற்சி

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், ஸ்டெம் எனப்படும் இந்தப் பயிற்சியின் மூலம் அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை செயல்விளக்கங்கள் வாயிலாக நடத்துவதற்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியை பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், பட்டதாரிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் அளிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது என்றும் 65 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் விரைவில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
65 Thousand teachers will get coaching from professors and graduates in the scheme of sarva siksha abhiyan. The Union Government has arranged for the coaching.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia