12ம் வகுப்பு கணிதத் தேர்வுக் கடினம்... மாணவர்கள் சோகம்

Posted By:

சென்னை : 12ம் வகுப்பு கணிதத்தேர்வில் 6 மார்க் கேள்வி கடினமாக இருந்ததாக மாணவ மாணவியர்கள் தெரிவித்துள்ளனர். அந்தக் கேள்வி நேரடியாக கேட்கப்படாமல் சுற்றி வளைத்து கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இந்த ஆண்டு 200க்கு 200 எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் நேற்று 27.03.2017 அன்று கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவியல் போன்ற தேர்வுக்ள் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்தது.

12ம் வகுப்பு கணிதத் தேர்வுக் கடினம்... மாணவர்கள் சோகம்

சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் கணிதத் தேர்வு கடினமாக இருந்தாக தெரிவித்துள்ளனர்.

கணிதத்தேர்வில் கேட்கப்பட்டிருந்த ஒரு மதிப்பெண் கேள்விகள் 40ம் எளிதாக இருந்தது. 6 மதிப்பெண் கேள்விகள் 10 கேட்கப்பட்டது. அதில் கட்டாயம் பதில் அளிக்க வேண்டிய கேள்வி மட்டும் கடினமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

கடினமாக உள்ள கேள்விகள் பாடத்திட்டத்தில் இருந்து நேரடியாக கேட்கப்படாமல் சுற்றி வளைத்து கேட்கப்பட்டதால் பெரும்பாலான மாணவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. 10 மார்க் கேள்விகள் 10 கேட்கப்பட்டிருந்தது அவைகள் எளிதாக இருந்தன என மாணவ மாணவியர்கள் தெரிவித்தனர்.

கணித கேள்வித்தாள் கடினமாக இருந்ததால் இந்த ஆண்டு 200க்கு 200 மதிப்பெண் எடுப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

English summary
Chennai Egmore State Girls Higher Secondary School Students said 6 mark questions are very difficult in 12th Maths public exam.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia