சிறுபான்மையினர் கல்வி மேம்பாட்டுக்காக 5 கோடி அமெரிக்க டாலர்கள் உலக வங்கி கடனுதவி!!

Posted By:

சென்னை: சிறுபான்மையினர் கல்வி மேம்பாட்டுக்காக 5 கோடி அமெரிக்க டாலர்கள் கடன் உதவியை மத்திய அரசுக்கு உலக வங்கி வழங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசும், உலக வங்கியும் கையெழுத்திட்டுள்ளன.சிறுபான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், அவர்களின் வேலைவாய்ப்புக்காகவும் இந்த கடனுதவி பயன்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்துக்கு நை மன்ஜில் திட்டம் எந்று பெயரிடப்பட்டுள்ளது என்று மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் (பொருளாதார விவகாரப் பிரிவு) ராஜ்குமார் தெரிவித்தார்.

சிறுபான்மையினர் கல்வி மேம்பாட்டுக்காக 5 கோடி அமெரிக்க டாலர்கள் உலக வங்கி கடனுதவி!!

அவர் மேலும் கூறியதாவது: மாறி வரும் உலக வளர்ச்சிக்கேற்ப சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்களும் வளர வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். நை மன்ஜில் திட்டம் மூலம் அவர்களது வேலைவாய்ப்புக்கும் உறுதி செய்யப்படும்.

இந்தத் திட்டத்தில் நானும், உலக வங்கியின் இந்திய ஆலோசகர்(ஆப்பரேஷன்ஸ்) மைக்கேல் ஹேனியும் கையெழுத்திட்டுள்ளோம் என்றார் அவர்.

17 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட முஸ்லிம்கள், பார்ஸிகள், ஜெயின், புத்த மதத்தவர், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம்.

English summary
The Union government and the World Bank signed a $50-million credit agreement for a project aimed at helping young people from minority communities complete their education and improve their employment opportunities.“The Nai Manzil Scheme is designed as an integrated education and training programme that provides youth from minority communities skills needed for different tasks in a rapidly changing world. Interventions under this project will support the Nai Manzil Scheme in improving the employability and performance of minority youth in the labour market,” Raj Kumar, Joint Secretary, Department of Economic Affairs, Ministry of Finance, said.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia