தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 புது உறுப்பினர்கள்.. யார் யார்?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புவதில் முதல் கட்டமாக 5 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் (2016) டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக 2016 ஜனவரி 31ம் தேதி 11 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம், ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தி உட்பட, 11 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

11 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்து டி.கே.எஸ் இளங்கோவன் உட்பட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

செல்லாது செல்லாது

வழக்கை விசாரித்த நீதபதிகள் 11 புதிய உறுப்பினர்களின் நியமனம் சட்டப்படி நடைபெறவில்லை அதனால் அவர்களுடைய நியமனம் ஏற்றுக்கொள்ளப்பட தக்கது அல்ல. எனவே அந்த நியமனம் செல்லாது என உயர்நீதி மன்றம் கடந்த ஆண்டு (2016) டிசம்பர் மாதம் அறிவித்தது.

உச்சநீதி மன்ற தீர்ப்பு

இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்
டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பதவிக்கு புதிய உறுப்பினர்கள் 11 பேரை தேர்ந்தெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்

புதிய உறுப்பனர்கள் நியமனம்

ஏற்கெனவே பதவி வகித்தோரில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தியை தவிர மற்றவர்கள் இப்பதவிக்கு மனு செய்யலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை அடுத்து ஏற்கெனவே உறுப்பினர்களாக இருந்தவர்களில் 5 பேர் மறுபடியும் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் களம் இறங்கிய ஐவர்

ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜாராம்; பொறியியல் பட்டதாரி கிருஷ்ணகுமார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக முன்னாள் தலைமை பொறியாளர் சுப்பிரமணியன், வழக்கறிஞர்கள் சுப்பையா, பாலுசாமி ஆகிய ஐந்து பேர் மீண்டும், டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கவர்னர் உத்தரவு

கவர்னர் உத்தரவுப்படி இதற்கான ஆணையை தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்து உள்ளார். புதிய உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பதவியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 புதிய உறுப்பினர்கள் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  Five persons have been appointed members of Tamil Nadu Public Service Commission (TNPSC). According to an order from the State government, retired IAS officer M. Rajaram, P. Krishnakumar, A. Subramanian, V. Subbiah and A.V. Balusamy have been appointed by the Governor as TNPSC members from the date of assumption of charge for six years or till they attain the age of 62, whichever is earlier.
  --Or--
  Select a Field of Study
  Select a Course
  Select UPSC Exam
  Select IBPS Exam
  Select Entrance Exam

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more