அறிவியல் படித்தால் என்ன வேலை கிடைக்கும்.. அஞ்சாதீங்க.. 5 ஐடியா எங்க கிட்ட இருக்கு!

syn : சைபர் பாதுகாப்பு, நானோ டெக்னாலஜி, மொபைல்டெக்னாஜலிஸ், ஏரோஸ்பேஸ் என்ஜீனியரிங், குவான்டம் பிசிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ் உள்ளிட்ட துறைகளில் அறிவியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்ப

By Super Admin

சென்னை: அதைப் படிச்சா என்ன வேலை கிடைக்கும்.. இதைப் படிச்சா என்ன வேலை கிடைக்கும்... படிக்கும் காலத்தில் மனதை ரொம்பவே பாடாய்படுத்தும் கவலை இதுதான். அதிலும் அறிவியல் படிப்பைப் படித்தால் என்னப்பா வேலை கிடைக்கும் என்று பலரும் குழம்பிப் போயிருப்பார்கள். ஆனால் கவலையே வேண்டாம்.. உங்களுக்கு 5 அருமையான சாய்ஸ் இருக்கு.

அறிவியல் பட்டதாரிகள் படிப்பை முடித்து விட்டு வெளியே வரும்போதே நமக்கேற்ற வேலையை எங்கே போய் தேடுவது என்ற கவலையுடன்தான் வெளியேறுகிறார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா.. அவர்களுக்கு நிறைய வேலவையாப்புகள் உள்ளன என்பதுதான்.

அறிவியல் படித்தால் என்ன வேலை கிடைக்கும்.. அஞ்சாதீங்க.. 5 ஐடியா எங்க கிட்ட இருக்கு!

அறிவியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்த ஒரு பார்வையை இதில் பார்ப்போம்:

சைபர் பாதுகாப்பு, நானோ டெக்னாலஜி, மொபைல்டெக்னாஜலிஸ், ஏரோஸ்பேஸ் என்ஜீனியரிங், குவான்டம் பிசிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ் உள்ளிட்டவை. இவையெல்லாம் அறிவியல் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் பிரிவுகளாகும். அறிவியல் பட்டதாரிகளுக்கான ஐந்து வேலை வாய்ப்புப் பாதைகளை இனி பார்ப்போம்.

1 டேட்டா அனலிஸ்ட் (தரவு ஆய்வாளர்) வேலையில் சேர உங்களுக்கு விருப்பமா

இது புதிய துறை அல்ல. நிறைய டிமாண்ட் உள்ளது. நல்லதொரு வேலைவாய்ப்புத் துறையும் கூட. கணிதம், புள்ளியியல் அறிவு தேவை. லாஜிக்கல், அனாலிடிக்கல் திறமை தேவை. நல்ல பேசும் திறமை தேவை. மார்க்கெட் ஆய்வு, பல்வேறு சோர்சுகளிலிருந்து தகவல் திரட்டுவது உள்ளிட்டவை இந்த வேலையின் முக்கிய அம்சம். வருடத்திற்கு ரூ. 3.5 முதல் 7 லட்சம் வரை ஊதியம் பெற முடியும்.


2 சைபர் பாதுகாப்பு ஸ்பெஷலிஸ்ட் பணியில் சேர ஒரு சிறந்த வாய்ப்பு

இதுவும் கூட ஒரு பெரிய துறைதான். நிறைய ஆட்கள் இதில் தேவைப்படுகிறார்கள். வரும் நாட்களில் ஆட்கள் அதிகம் தேவைப்படுவர். நெட்வொர்க் செக்யூரிட்டி குறித்த அறிவு, சைபர் தடவியல், சைபர் சட்டங்கள், லினக்ஸ் மற்றும் யுனிக்ஸ் அறிவு தேவை. வருடத்திற்கு ரூ. 4 முதல் 6.5 லட்சம் வரை ஊதியம் ஈட்டலாம்.

3 தடயவியல் (தடயவியல் விஞ்ஞானி} துறையில் காலிப் பணியிடங்கள் காத்திருக்கின்றன

பயோடெக்னாலஜி, ஹெல்த்கேர், ஐடி துறைகளில் இந்த வேலைக்கு நிறைய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். தேவையான திறமைகள் அனாலிடிகல் மற்றும் லாஜிக்கல் திறமை, ஒ!ருங்கிணைப்பு, ஆய்வு மற்றும் வளர்ச்சி, ஆய்வகத தொழில்நுட்பம் ஆகியவை. கோர்டுட்டுகளில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்படும் சாட்சியங்களை சேகரிப்பதும், அதை பாதுகாப்பதும் இந்த வேலையின் முக்கிய அம்சமாகும். வருடத்திற்கு 4 முதல் 6.5 லட்சம் வரை சம்பாதிக்க முடியும்.

4 மொபைல் பயன்பாடு டெவலப்பர் பணியில் அமர ஆசையா இருக்கா

மொபைல் ஆப் டெவலப்பர் ஒரு அருமையான வேலை வாய்ப்பு. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு நல்ல சான்ஸ் இதில் உள்ளது. இப்போது மொபைல் இல்லாதவர்களே கிடையாது. அதில் ஆப் இல்லாமல் எதுவுமே இல்லை. எனவே இதில் பிரகாசமான வேலைவாய்ப்புகள் உள்ளன. ஜாவாஸ்கிரிப்ட், சி#, ஜாவா அல்லது சி ++, ஆப்ஜெக்டிவ் சி அல்லது ஸ்விப்ட் ஆகியவை இதற்குத் தேவையான திறமைகளாகும். ஆரம்ப நிலையில் வருடத்திற்கு ரூ. 3 லட்சம் 6.5 லட்சம் சம்பாதிக்க முடியும்.

5 வானியல் துறை உங்களை வரவேற்கிறது உடனே வேலைக்காக விண்ணப்பியுங்கள்

தட்பவெப்பநிலை, வானிலை உள்ளிட்டவை குறித்த வேலையாகும் இது. இதற்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது. அதேசமயம், உலக அளவில் தற்போது இதற்கு நல்லடிமாண்ட் பெருகி வருகிறது. அனாலிடிட்டிகல், லாஜிக்கல் திறமை அவசியம். நல்ல தகவல் தொடர்பு திறமை இருக்க வேண்டும். வருடத்திற்கு 3 முதல் ரூ. 6.5 லட்சம் வரை சம்பாதிக்க முடியும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
End of every academic year, fresh batches of science graduates enter the job market with one main question "Where do I find the best career opportunity?" The options for such graduates with science backgrounds are numerous. We provide you the latest, best trending job opportunities which science graduates can opt for other than the usual stuff. The career paths that are found to be popular among science graduates are as follows:
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X