5 லட்சம் மாணவர்கள் எழுதிய விஏஓ தேர்வு!!

சென்னை: கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) தேர்வை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.

இந்தத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழகம் முழுவதும் நேற்று நடத்தியது.

5 லட்சம் மாணவர்கள் எழுதிய விஏஓ தேர்வு!!

மொத்தம் 813 விஏஓ பணியிடங்கள் காலியாக இருந்தன. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இந்தத் தேர்வு நடைபெற்றது. சுமார் 10 லட்சம் பேர் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

ஆனால் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மட்டுமே இந்தத் தேர்வை எழுதினர்.

சென்னையில் 257 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தனர்.

விஏஓ பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி என்பதால் ஏராளமானோர் இதற்கு விண்ணப்பித்திருந்தனர்.

தேர்வு எழுதுவோருக்கென மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதியும், மாற்று திறனாளிகள் தேர்வு எழுத ஏதுவாக தரைத்தளத்தில் இட ஒதுக்கீடும் செய்யப்பட்டிருந்தது.

தேர்வு எழுதுவோர் செல்லிடப்பேசி உள்ளிட்ட சாதனங்களைத் தேர்வு எழுதுவோர் மையங்களுக்கு கொண்டுவரக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
More than 5 lakh candidates turned up for the VAO exam conducted by Tamil Nadu Public Service Commission (TNPSC) in Tamil nadu on Sunday.In Salem, a total of 41,937 candidates appeared for the examination held in 191 centres across the district. A total of 56,320 candidates had applied for the examination, of which 14,383 (25.5 per cent) did not appear, according to official sources.Tight security arrangements were made at all the examination centres and the exam process was videographed.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X