செப்டம்பர் 3-வது வாரத்தில் எம்பிபிஎஸ் 3-வது கட்ட கவுன்சிலிங்

Posted By:

சென்னை: எம்பிபிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான 3-வது கட்ட கவுன்சிலிங் செப்டம்பர் 3-வது வாரத்தில் நடைபெறும் என்று தேர்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ள அரசு இடங்களில் மாணவர்கள் சேர்க்கையை மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழு நடத்தியது.

செப்டம்பர் 3-வது வாரத்தில் எம்பிபிஎஸ் 3-வது கட்ட கவுன்சிலிங்

இதில் 2 கட்டமாக கவுன்சிலிங் நடத்தப்பட்டு 2,257 எம்பிபிஎஸ் இடங்களும், 85 பிடிஎஸ் இடங்களும் நிரப்பப்பட்டன.

இந்த நிலையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., மொத்த இடங்களில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுவது தெரிந்ததே.

அதன்படி தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 398 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் ஆகும். அகில இந்திய ஒதுக்கீட்டின் அடிப்படையிலான கவுன்சிலிங் அடிப்படையில் உரிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு செப்டம்பர் 15-ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, செப்டம்பர் 15-ஆம் தேதிக்குப் பிறகுதான் அகில இந்திய ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேராத மாணவர்களின் காலியிடம் குறித்த விவரம் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் காலியாகவுள்ள இடங்களுக்கு செப்டம்பர் 3-வது வாரத்தில் கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. அநேகமாக செப்டம்பர் 20-ஆம் தேதிக்கு மேல் இந்த 3-ஆம் கட்டக் கவுன்சிலிங் நடைபெறும் என்று தெரிகிறது.

அந்த கவுன்சிலிங்கின்போது அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும் என்று தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
3rd phase counselling for the MBBS courses admission will be conducted in september 3rd week. The selection committee sources said.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia