நாளை ஆசிரியர் தினம்: 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

Posted By:

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 377 ஆசிரியர்களுக்கு சென்னையில் நாளை டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படவுள்ளது.

ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ம் தேதி முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். அந்த தினத்தில் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு நல்லாசிரியர் விருதை தமிழக அரசு வழங்கி வருகிறது.

நாளை ஆசிரியர் தினம்: 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

இந்த ஆண்டு 377 ஆசிரியர்களுக்கு அந்த நல்லாசிரியர் விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருது பெறும் ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியலை பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 201 ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 134 ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 30 ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த 10 விரிவுரையாளர்கள் என மொத்தம் 377 பேர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

சென்னை சேத்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி இந்த விருதுகளை வழங்க உள்ளார்.

English summary
377 Teachers has been selected for Dr. Radhakrishnan Award in Taminadu. School education Directorate has released the awardees list yesterday

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia