பள்ளிக்கல்வித்துறையில் 37 அதிரடி அறிவிப்புகள் வெளியீடு.. அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Posted By:

சென்னை : இன்று பேரைவயில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 37 அதிரடி அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறையில் வெளியிட்டுள்ளார். புதிய தொடக்கப்பள்ளிகள் மற்றும் நூலகங்கள் அமைப்பது உள்பட 37 அதிரடி அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

3 கோடி செலவில் 32 மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் 37 அதிரடி அறிவிப்புகள் வெளியீடு.. அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

30 கோடி செலவில் புதிய நூல்கள் அனைத்து நூலகங்களுக்கும் வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலைப்பகுதி மற்றும் கிரமாங்களில் 30 தொடக்கப் பள்ளிகள் புதிதாக தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கல்வி வளர்ச்சியில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு புதுமை பள்ளி விருது வழங்கப்படும்

மதுரையில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு பயன்படும் வகையில் அங்கு 1 லட்சம் நூல்கள் கொண்ட நூலகம் திறக்கப்படும்

அரிய புத்தகங்கள் மற்றும் ஆவண்ஙகள் மக்களிடம் இருந்து பெறப்படும்.

மெட்ரிக் பள்ளிகள் தொடங்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

4 ஆயிரத்து 84 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் கணிணி வழி கற்றல் மையம் உருவாக்கப்படும்

17 ஆயிரம் தற்காலிக பணியிடங்கள் நிரந்த பணியிடங்களாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

31,322 பள்ளிகளில் மாணவர் பொது அறிவை வளர்க்க நாளிதழ் மற்றும் சிறுவர் இதழ் வாங்கப்படும்

கீழடியில் சிந்து சமவெளி உட்பட பழம் பெரும் நாகரிகம் பற்றி அறியும் வகையில் சிறப்பு நூலகம் அமைக்கப்படும்.

5,639 பள்ளிகளில் ரூ. 22.56 கோடி செலவில் நாப்கின் வழங்கும் இயந்திரம் வாங்கப்படும்

கலை அறிவியல் கல்லூரிகளில் 89 புதிய படிப்புகள் கொண்டு வரப்படும்.

உயர்க்கல்வி கடன்களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இது போன்ற 37 அதிரடி அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

English summary
School Education Minister K.A. Sengottaiyan has released 37 notifications in the School Education Department.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia