366 ஆசிரியர்களுக்கு புரமோஷன்!!

Posted By:

சென்னை: தமிழகத்தில் பணியாற்றும் 366 ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக புரமோஷன் அளிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை, சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களாக பணியாற்றி வந்த 366 பேர் தற்போது பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று அதிக சம்பள அடிப்படைக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

366 ஆசிரியர்களுக்கு புரமோஷன்!!

பட்டதாரி ஆசிரியர்களாக புரமோஷன் செய்வதற்கான ஆன்-லைன் கவுன்சிலிங் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த ஆன்-லைன் கவுன்சிலிங்கில் மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்பட்டனர். இதையடுத்து, அவர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டது.

அப்போது மாவட்டத்துக்குள் 1,310 பட்டதாரி ஆசிரியர்களும், மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு 555 பேரும் டிரான்ஸ்பர் பெற்றனர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற கவுன்சிலிங்கில் இடைநிலை, சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புரமோஷன் வழங்கப்பட்டது.

இந்த ஆன்-லைன் கவுன்சிலிங்கில் மொத்தம் 366 பேர் புரமோஷன் பெற்று உயர்பதவிக்குச் சென்றுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி, கல்வித்துறை செய்திருந்தது.

English summary
The School Education Department has given promotion tp 366 Teachers as graduate Teachers. The Department has conducted online counselling for the promotion of teachers.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia